search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guns"

    • பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
    • கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

    கோபி:

    தேர்தல் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், சிறுவலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இதுவரை 111 பேர் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

    • மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார்.
    • பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு நகரமான குரிகாவில் உள்ள பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் 280-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்க உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகளுடன் போராடியுள்ளனர்.

    ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டினர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தெரிகிறது. மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நைஜீரியா அதிபர்போலா டினுபு கூறும்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு கடத்தியவர்களை விடுவிக்கிறார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.

    • காட்டு விலங்குகளை வேட்டையாடுவதாக வெளியான புகாரின்பேரில் அதிரடி நடவடிக்கை
    • போலீஸ் நிலையம், வனத்துறை அலுவலகம், ஊர்த்தலைவர்களிடமும் ஒப்படைக்க உத்தரவு

    கோவை,

    கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு விலங்குகள் உள்ளன. அவற்றை ஒரு சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதாக புகார் எழுந்து உள்ளது.

    இந்த நிலையில் கோவை மாவட்ட வனச்சரக அதிகாரி ஜெயராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதன்படி கோவை வனச்சரக பகுதிகளில் ஒருசிலர் நாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி வேட்டையாடும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் அவுட்டுக்காய் தயாரித்து விற்பது, வெடிமருந்துகளை தவறாக பயன்படுத்துவது போன்ற குற்றசெயல்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. எனவே கோவை மாவட்டத்தில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்போர் உடனடியாக அவற்றை அந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையம், வனத்துறை அலுவலகம் மற்றும் ஊர்த்தலைவர்கள் ஆகியோரிடம் ஒரு மாதத்துக்குள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

    அப்படி ஒப்படைக்காவிட்டால் மோப்பநாய்கள் மூலம் கண்டறியப்பட்டு, நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்போர் மீது இந்திய ஆயுத சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். வனத்துறை சார்பிலும் வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் நாட்டு துப்பாக்கி பயன்படுத்துவோர், அவுட்டுக்காய் தயாரிப்பவர்கள் மற்றும் வெடிமருந்துகளை பதுக்கி வைத்து தவறாக பயன்படுத்துவோர் பற்றி பொதுமக்களுக்கு ஏதேனும் விவரங்கள் தெரிந்தால் அதுகுறித்து உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
    • போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர்.

    கடலூர்:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் போலீசார் கடலோர பகுதிகளில் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடல் பகுதிக்கு விசை படகில் மத்திய, மாநில அதிரடி படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அவர்கள், கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் வெடிகுண்டு வைப்பதற்காக வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை துறைமுகம் பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ராஜ்குமாரின் பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • தனது பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்சு பெற்று, கை துப்பாக்கி வைத்திருப்பதாக கூறினார்.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும், பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரான ராஜ்குமார் என்பவரின் கைப்பையை மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில், 7 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. இதைத்தொடர்ந்து ராஜ்குமாரின் பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தனது பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்சு பெற்று, கை துப்பாக்கி வைத்திருப்பதாகவும், பயணத்தின்போது, தவறுதலாக கார் டிரைவர் துப்பாக்கி குண்டு இருந்த கைப்பையை மாற்றி வைத்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் திருப்பூர் மாநகர போலீஸ் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் ெரயில் நிலையத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருடன் திருப்பூர் மாநகர போலீஸ் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். 

    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு லட்சுமி நகரில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தனியார் செக்யூரிட்டி வேனில் ரூ.5 லட்சம் ரொக்க பணம், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    வடவள்ளி:

    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு லட்சுமி நகரில் இன்று காலை வடக்கு சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், ஏட்டுகள் ராஜேந்திர பிரசாத், ரங்கசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு தனியார் செக்யூரிட்டி வேனில் 5 பேர் வந்தனர். வேனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியபோது கணபதியில் இருந்து இருட்டுப்பள்ளத்துக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப செல்வதாக வேனில் இருந்தவர்கள் கூறினர். அவர்கள் கொண்டு வந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. மேலும் அவர்களிடம் 2 ஏர் ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதற்கும் உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் காரில் வந்தவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது 40), ஜம்முவை சேர்ந்த சவாதிகான் (22), பணப்பொறுப்பாளர் கங்காதரன், உதயகுமார் மற்றும் வேன் டிரைவர் நாகராஜ் ஆகியோர் என்பதும் இவர்கள் கோவை ராமநாதபுரத்தில் இயங்கி வரும் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் செக்யூரிட்டி கம்பெனியில் வேலை செய்வதும் தெரியவந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மற்றும் 2 துப்பாக்கிகளும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019


    தேனி மாவட்டத்தில் துப்பாக்கி உரிமதாரர்கள் தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை ஒப்படைக்க மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #ParliamentElection
    தேனி:

    தேனி மாவட்டத்தில் தேனி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2019 மற்றும் ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை யொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகளின்படி, தேர்தல்களை சுதந்திரமாகவும், அமைதியான முறையில் நடத்திட துப்பாக்கிகள் அனைத்தும் அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் தேனி மாவட்டத்தில் உள்ள படைக்கலன் (துப்பாக்கி) உரிமதாரர்கள் அனைவரும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலோ அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ தங்கள் வசமுள்ள துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ, அரசு உரிமம் பெற்ற தளவாட கிடங்கிலோ உடனடியாக ஒப்படைத்து அதற்கான ரசீதினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும், படைக்கலன் உரிமதாரர்கள் தங்கள் வசமுள்ள துப்பாக்கி ஆயுதங்களை ஒப்படைக்கப்படாமல் தங்கள் வசமே வைத்திருப்பது கண்டறியப்பட்டால் துப்பாக்கியை பறிமுதல் செய்து, உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் படைக்கல சட்ட விதி மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 ஆகியவற்றின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #ParliamentElection

    உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    உளுந்தூர்பேட்டை:

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விழுப்புரம் அருகே அரும்பட்டு கிராமத்தில் இரு சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணமான 17 வயது சிறுமியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அந்த சிறுமிக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

    தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்திலேயே கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த சிலர் தான் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தனர். ஆனால் தற்போது எறையூர் பகுதியை சேர்ந்த பலர் தங்களது வீடுகளில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அவ்வாறு உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனே அதனை எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×