search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட பணம், துப்பாக்கிகள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பணம், துப்பாக்கிகள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    வாகன சோதனையில் ரூ.5 லட்சம் ரொக்க பணம்- 2 துப்பாக்கிகள் பறிமுதல்

    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு லட்சுமி நகரில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தனியார் செக்யூரிட்டி வேனில் ரூ.5 லட்சம் ரொக்க பணம், 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
    வடவள்ளி:

    கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு லட்சுமி நகரில் இன்று காலை வடக்கு சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப், ஏட்டுகள் ராஜேந்திர பிரசாத், ரங்கசாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு தனியார் செக்யூரிட்டி வேனில் 5 பேர் வந்தனர். வேனை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியபோது கணபதியில் இருந்து இருட்டுப்பள்ளத்துக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப செல்வதாக வேனில் இருந்தவர்கள் கூறினர். அவர்கள் கொண்டு வந்த ரூ.5 லட்சம் ரொக்கப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. மேலும் அவர்களிடம் 2 ஏர் ரைபிள் துப்பாக்கிகள் இருந்தன. அதற்கும் உரிய ஆவணங்கள் இல்லை. இதனையடுத்து ரூ.5 லட்சம் பணம் மற்றும் 2 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் காரில் வந்தவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது 40), ஜம்முவை சேர்ந்த சவாதிகான் (22), பணப்பொறுப்பாளர் கங்காதரன், உதயகுமார் மற்றும் வேன் டிரைவர் நாகராஜ் ஆகியோர் என்பதும் இவர்கள் கோவை ராமநாதபுரத்தில் இயங்கி வரும் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் செக்யூரிட்டி கம்பெனியில் வேலை செய்வதும் தெரியவந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மற்றும் 2 துப்பாக்கிகளும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019


    Next Story
    ×