search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "search"

  • மானாமதுரையில் உளள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர்.
  • விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தார்.

  மானாமதுரை

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பகுதியில் இனிப்பு, கார வகைகள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத்து றையினர் திடீர் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தர–வின்படியும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின் பேரிலும் சிவகங்கை உணவு பாதுகாப்பு அலுவலர் சர வணக்குமார் மானா மதுரை நகரிலுள்ள பல இனிப்பு வகை கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத் தினார்.

  இதில் தரமான முறையில் இனிப்பு, கார வகைகள் தயார் செய்யப்படுகிறதா? என்று கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கெட்டுப்போன மற்றும் அதிக கலர் பொடி கலந்து உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகை யில் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ இனிப்பு வகைகளை பறிமுதல் செய்து அவற்றை அழித்தார்.

  மேலும் இவற்றை பறிமு தல் செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இனிப்பு வகைகளை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களிடம் இனிப்பு, காரம் தயாரிப்புக்கு ஒருமுறை பயன்படுத்தும் எண்ணையை மீண்டும் வடி கட்டி பயன்படுத்த கூடாது. இனிப்பு வகைகளில் அதிக கலர் பொடி சேர்க்க கூடாது என்றும் சரவணக்குமார் அறிவுறுத்தினார்.

  • தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று அதிரடி சோதனை மேற் கொண்டனர்.
  • திருவாமூர் மோகன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  கடலூர்:

  தமிழகம் முழுவதும் கொலை குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடு களை சோதனை செய்ய டி.ஜி.பி. உத்தரவிட்டார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காடாம்புலியூர் இன்ஸ் பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப்- இன்ஸ் பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆயுதம் பதுக்கி வைத்துள்ளார் களா? குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் எங்கு உள்ளார்கள்? தற்போது என்ன செய்து வருகிறார்கள்? என்பது குறித்து வீடு வீடாக சென்று அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

  அப்போது கொலை வழக்கில் கைதாகி ஜாமி னில் வந்த தலைமறைவு குற்றவாளி திருவாமூர் மோகன் (வயது 35) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பண்ருட்டியில் போலீ சார் அதிரடியாக குற்ற வழக்குகளில் சம்பந்தப் பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அதிரடியாக சோதனை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • காரைக்காலில் போதை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
  • ரூ.1000 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது.

  புதுச்சேரி:

  காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள ஒரு கடையில் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார், குறிப்பிட்ட கடையில், சில சாட்சிகள் முன்னிலையில் சோதனை செய்தபோது, ரூ.1000 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது. மேலும், கடை உரிமையாளர் காரைக்கால் பெருமாள் கோவில் வீதியைச்சேர்ந்த முகம்மது சகாபுதினை போலீசார் கைது செய்தனர்.

  • வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை 2-வது நாளாக தேடி வருகின்றனர்
  • இது குறித்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

  நம்பியூர்,

  ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள நடுப்பாளையம் கிழக்கு வீதி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் பிரியா தனது வீட்டின் அருகில் உள்ள கீழ்பவானி வாய்க்கா லுக்கு குளிக்க சென்றார். அதை தொடர்ந்து தான் எடுத்து வந்த செல்போன் மற்றும் காலணிகளை கரை யில் வைத்து விட்டு கீழ் பவா னி வாய்க்காலில் இறங்கி உள்ளார். கீழ்பவா னி வா ய்க்கலில் பாசனத்தி ற்காக அதிகளவில் தண்ணீர் திறக்க ப்பட்டு உள்ளதால் கீழ் பவானி வாய்க்காலின் இரு கரை களையும் தொட்டபடி தண்ணீர் வேகமாக செல் கிறது. தண்ணீர் அதிகளவில் சென்றதால் பிரியா வாய்க்காலில் குளித்த போது திடீரென நீரில் மூழ்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

  இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது உறவினர் மற்றும் தீயணை ப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கீழ்பவானி வாய்க்கா லில் இறங்கி பிரியாவை தேடினர். ஆனால் பிரியா குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை. தொடர்ந்து அவர்கள் தேடி வருகிறன்ற னர். இந்த நிலையில் இன்று காலை முதல் 2-வது நாளாக தொடர்ந்து தீய ணைப்பு வீரர்கள் வாய்க்காலின் பல பகுதி களில் அவரை தேடி வருகி ன்றனர்.இது குறித்து நம்பியூர் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். 

  • குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • அதே பகுதியை சேர்ந்த பிச்சை என்பவரை போலீசார் கைது செய்தனர்.

  கடலூர்:

  கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டக்குடி தாலுகா மேல் கல் பூண்டி தனியார் மில்லில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர்கள் முருகானந்தம், ராஜா, பவானி ஆகியோர் மாவு மில்லுக்கு நேரில் சென்றனர்.

  அங்கு சோதனை மேற்கொண்டபோது, 30 சாக்கு மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிச்சை (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

  • திமுக ஊராட்சி செயலாளர் உள்பட 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
  • போலீஸ் நிலையம் முன்பு தலித் இளைஞரை காலில் விழ வைத்த விவகாரம்

  அரியலூர்,

  அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன். பாஜக ஒன்றிய செயலாளராக இருக்கும் இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரது மகளுக்கு கடந்த 8-ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்கு அங்குள்ள ஆதிச்சன நல்லூர் கிராமத்தில் இருந்து தாய்மாமன் சீர்வரிசை எடுத்து வரப்பட்டது. அப்போது அன்பரசன் தரப்பினர் அங்குள்ள ஒரு தெருவில் பட்டாசு வெடித்துள்ளனர்.மறுநாள் அன்பரசனின் இளைய சகோதரர் திருநாவுக்கரசு போதையில் மேற்கண்ட தெருவில் பெட்டிக்கடையில் நின்று கொண்டு சிகரெட் வாங்கி பற்ற வைத்ததாக கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த ஒருவர் என்னடா வெடி வெடிக்கிறீங்க. சிகரெட் வாங்கி குடிக்கிறீங்க பெரிய ஆள் ஆகி விட்டீர்களா என கேட்டு தகராறு செய்தார. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்த தகவல் அறிந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஊராட்சி செயலாளருமான கண்ணன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர்.மறுநாள் காவல் நிலையம் முன்பு திருநாவுக்கரசு ஊர் மக்கள் முன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.இதை அறிந்த அன்பரசன் அதிர்ச்சி அடைந்தார்.பாஜக தெற்கு ஒன்றிய கழகச் செயலாளராக இருக்கும் அவர் காவல் நிலையம் முன்பு காலனி தெருவை சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது தீண்டாமை அல்லவா என பதிவிட்டு பதிவு தபால் மூலம் குடியரசுத் தலைவர், தமிழக கவர்னர்,மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர்களுக்கு புகார் மனு அனுப்பினார்.இதைத்தொடர்ந்து அன்பரசன் கொடுத்த புகாரின் பேரில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன், ராஜேஷ் ,ராமச்சந்திரன், ரமேஷ் ,அருண், வேலுச்சாமி, உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ராஜேஷ் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். அவர் மீது எஸ்சி எஸ்டி தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் தலைமறைவாக உள்ள திமுக ஊராட்சி செயலாளர் கண்ணன் உள்ளிட்ட 5 பேரை இரண்டு தனிப்படை போலீசார் வலைவீசி தேடுகின்றனர். இந்த சம்பவம் மேற்கண்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 400 கிராம் எடையுள்ள 129 புகையிலை பொருட்கள் இருந்தது.
  • புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

  கும்பகோணம்:

  திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் கும்பகோணம் வழியாக செல்லும் ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சில மர்ம நபர்கள் சாக்கு முட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரெயில் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

  இந்த சோதனையில் முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் சந்தேகப்ப டும்படி இருந்த ஒரு சாக்கு மூட்டையை போலீசார் சோதனையிட்டனர். அந்த சாக்குமூட்டை குறித்து அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த சாக்கு மூட்டைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து ரயில்வே தனிப்படை போலீசார் கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் அந்த சாக்கு மூட்டையை இறக்கி திறந்து பார்த்தனர். அப்போது அதில் 400 கிராம் எடையுள்ள 129 புகையிலை பொருட்கள் பொட்டலங்கள் 50 கிலோவுக்கு இருந்தது.

  இதைத்தொடர்ந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 50 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை கும்பகோணம் மாநகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலரிடம் அரசின் வழிகாட்டுதல் படி அழிக்க ஒப்படைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

  • 3 வீடுகளில் விபசாரம் நடைபெறுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டை சேர்ந்த துரை என்பவரையும் கைது செய்தனர்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறை, பொய்குணம் சாலை ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகே உள்ள 3 வீடுகளில் விபசாரம் நடைபெறுவதாக சங்கராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நரசிம்ம ஜோதி, ஜெயமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் தகவல் கிடைக்க பெற்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

  அப்போது 3 பெண்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து, செல்போன் மூலம் வாடிக்கை யாளர்களை வரவழைத்து விபசாரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 3 வீடுகளில் இருந்த 8 அழகிகள் மற்றும் விபசாரத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளரான சங்கராபுரம் அடுத்த சோழம் பட்டை சேர்ந்த துரை (43) என்பவரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

  • பண்ருட்டியில் சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • தனிப்படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

  கடலூர்:

  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். பலர் பார்வை இழந்தனர்.இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் தனிப் படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது அதே பகுதியை சேர்ந்தஅன்பழகன் (60 மதகடிப்பட்டு சென்று 12 சாராய பாக்கெட் வாங்கி கொண்டு வந்து புலவனூர் கர்ம காரிய கொட்டகை அருகில்விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை த்தொடர்ந்து அவரைகைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
  • தப்பியோடிய சத்தியசீலனை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.

  தரங்கம்பாடி:

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன்.

  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

  இதைத் தொடர்ந்து தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் அங்கு 310 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

  இதனை அடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

  மேலும் இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப் பிரிவு புலனாய்வு துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து தகவல் அறிந்ததும் சத்தியசீலன் தப்பியோடி விட்டார் அவரை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.

  கைப்பற்றப்பட்ட அரிசி மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.