என் மலர்
உள்ளூர் செய்திகள்

சோதனையில் ஈடுபட்ட போலீசார்.
மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது
- மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விபசாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக திருவிடைமருதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், நாகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் திருவிடைமருதூர் மெயின் ரோடு ஐந்து தலைப்பு வாய்க்கால் அருகில் உள்ள மசாஜ் சென்டர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மசாஜ் சென்டரில் இருந்த தரகர் தாமஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற் ெகாண்டனர்.
விசாரணையில் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுப்பட்டதை ஒப்பு கொண்டார்.
மேலும் அவர் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கும்பகோணம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக தெரிய வந்தது.
இது தொடர்பாக கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விபசாரத்தில் ஈடுபட்ட மசாஜ் சென்டரின் தரகர் மணிகண்டன் மற்றும் 2 பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் மூன்று பேரை தேடி வருகின்றனர் .