search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewels"

    • வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தெய்வேந்திரன்.

    இவரது மனைவி கோமளவல்லி (வயது 48).

    சம்பவத்தன்று காலையில் இவர் தனது பிள்ளையின் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த கோமளவல்லி உள்ளே சென்று பார்த்தார்.

    பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்த அவர் தஞ்சை தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • 2-ந் தேதி முருகப்பெருமாள் வீட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • மாமியார்- மருமகளை கட்டிப்போட்டு 62 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4 இடங்களில் பெரிய அளவிலான கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

    கடந்த 2-ந் தேதி பாளையங்கோட்டை மகாராஜநகரை சேர்ந்த அரசு அதிகாரி முருகப்பெருமாள் என்பவர் வீட்டை உடைத்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    நேற்று முன்தினம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி இளங்கோ தெருவை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான கற்பக வள்ளி என்பவரது வீட்டு கதவின் பூட்டை உடைந்து அங்குள்ள பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் உண்டியல்களையும் எடுத்து சென்றனர்.

    இதேபோல் நேற்று முன் தினம் இரவு தூத்துக்குடி முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை அன்னை தெரசா நகரை சேர்ந்த அற்புதராஜ் என்பவரது வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த மாமியார்- மருமகளை கட்டிப்போட்டு 62 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடையநல்லூர் அருகே சேர்ந்த மரம் பகுதியில் என்ஜினீயர் திருமலை நாதன் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

    எனவே போலீசார் விரைந்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
    • இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம், குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார்.

    திருமண நிச்சயம்

    இவரது மனைவி கலைச்செல்வி (45). இவர்களது மகள் நிஷாந்தி (23). இவருக்கு கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருப்பதால் மணமக்களின் வீட்டார் குடும்பம் சகிதமாக நேற்று காலை திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் எடுக்க ஈரோட்டுக்கு காரில் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

    காரில் வந்த மர்மநபர்கள்

    இந்த நிலையில் கந்தசாமி குடும்பத்தினர் வெளியே சென்ற சிறிது நேரத்தில் 2 மர்ம நபர்கள் காரில் வந்தனர். தெருவின் முன்பகுதியிலேயே காரை நிறுத்திவிட்டு கந்தசாமியின் வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு தனியாக இருந்த கந்தசாமியின் தாய் அருக்காணி (80) தோட்டத்திற்கு செல்வதற்கு தயாராக வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் மட்டும் அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். வீட்டு வேலைக்காக அண்ணன் வரச் சொன்னார் என மூதாட்டியிடம் தெரி வித்துள்ளார். வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் துணி எடுக்க சென்றுவிட்டனர். நாளைக்கு வாருங்கள் என மூதாட்டி கூறியுள்ளார்.

    மூதாட்டியிடம் ஒருவர் பேசிக் கொண்டிருந்த இந்த வேளையில் மற்றொரு மர்மநபர் வீட்டின் அருகே சென்று முன்புற கதவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இதனிடையே மூதாட்டி அந்த மர்ம நபரிடம் பேசிவிட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.

    நகை, பணம் கொள்ளை

    இதையடுத்து மர்ம நபர் வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் வைத்திருந்த சாவியை எடுத்து லாக்கரை திறந்து நிஷாந்தியின் திருமணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதற்காக வைத்திருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து திருடிக் கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் மூதாட்டி அருக்காணி தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அருகில் உள்ள வர்களிடமும், தனது மகன் கந்தசாமிக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் வீட்டிற்கு வந்த கந்தசாமி பீரோவை திறந்து பார்த்த போது அதிலிருந்த மொத்த பணம், நகைகள் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது.

    கைரேகை நிபுணர்கள்

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு கந்தசாமி உடனடி யாக தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, நாமக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகை களை பதிவு செய்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கண்காணிப்பு கேமிரா ஆய்வு

    இதையடுத்து பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பரமத்திவேலூர் முதல் குப்பிச்சிபாளையம், மோகனூர் வரை உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு நடந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாக சென்ற வாகனங்கள், கந்தசாமி வீட்டிற்கு சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காளியண்ணன்(79), இவரது மனைவி நல்லம்மாள் (70) . நல்லம்மாள் அருகிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.
    • வேலை முடிந்து மதியம் அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டுக்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோதூர் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் குடியிருந்து வருபவர் காளியண்ணன்(79), இவரது மனைவி நல்லம்மாள் (70) . நல்லம்மாள் அருகிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.காளியண்ணன் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு வேலை முடிந்து மதியம் அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டுக்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.

    இருவரும் சுற்றுச்சுவரை ஏறி குதித்து வெளியே தயாராக புல்லட் மோட்டார் பைக்குடன் ஒருவர் இருந்துள்ளார். அந்த புல்லட் மோட்டார் பைக்கில் ஏறினார்கள் . பின்னர் மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்த போது மோட்டார் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேர் புல்லட் மோட்டார் பைக்கை சிறிது தூரம் தள்ளிக்கொண்டு சென்றனர். அவருக்கு பின்னால் சென்ற காளியண்ணன் வேகமாக நடக்க முடியவில்லை . அதனால் சத்தம் போட்டு உள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஓடி வருவதை பார்த்த மூன்று வாலிபர்களும் புல்லட் மோட்டார் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காளியண்ணனும் அவரது மனைவி நல்லம்மாளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த டேபிள் டிராயரில் வைத்திருந்த பணம் ரூ.50 ஆயிரமும், 5 பவுன் தங்க நகையும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து காளியண்ணனின் மகன் மணி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நல்லூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு புல்லட் மோட்டார் பைக்கை விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் திருடர்கள் விட்டு சென்ற மோட்டார் பைக் திருடி வந்துள்ளது தெரிய வருகிறது. மேலும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தப்பியோடிய மூன்று திருடர்களையும் தொடர்ந்து தேடி வந்தனர். அப்போது தப்பியோடிய மூன்று நபரில் ஒருவரான ராஜ்குமார் என்பவர் கோதூரிலிருந்து செருக்கலை செல்லும் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு கோழி பண்ணைக்குள் புகுந்து மறைந்து இருப்பது தெரியவந்தது. அவனை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து நல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் தொடர்ந்து அந்த சுற்றுவட்டார பகுதிகளில் திருடர்களை தேடிய நிலையில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் தொட்டியம் தோட்டம் பகுதியில் விக்னேஷ் என்பவன் மறைந்து இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற பொதுமக்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் ராஜ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதனை தொடர்ந்து இருவரும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தப்பியோடிய மற்றொரு திருடனை நல்லூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • காளியண்ணன் வேலைக்கு சென்று விட்டு மதியம் 3.45 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர்.
    • இதையடுத்து தப்பிச் சென்ற இருவரும் அந்த புல்லட்டில் ஏறினர். பின்னர் புல்லட்டை ஸ்டார்ட் செய்தபோது அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேரும் புல்லட்டை தள்ளிக்கொண்டு ஓடினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சாலப்பாளையம் வி.ஐ.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணி (59). இவர் ரிக் வண்டி தொழில் செய்து வருகிறார்.

    100 நாள் வேலை

    இவரது தந்தை காளி யண்ணன், தாயார் நல்லம்மாள் ஆகியோர் பரமத்திவேலூர் அருகே கோதூர் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில் வசித்து வருகின்றனர். காளியண்ணன் 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மணியின் தாயார் நல்லம்மாள் அருகிலுள்ள தோட்டத்திற்கு வீட்டை பூட்டாமல் வெளி தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு சென்று விட்டார்.

    2 மர்மநபர்கள்

    காளியண்ணன் வேலைக்கு சென்று விட்டு மதியம் 3.45 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் இருந்து 2 மர்ம நபர்கள் வெளியில் வந்துள்ளனர். அதைப் பார்த்த காளியண்ணன் சத்தம் போட்டுள்ளார்.

    புல்லட்

    இதை பார்த் இருவரும் சுற்றுச்சுவரை ஏறி குதித்தனர். அங்கு மற்றொருவர் பதி வெண் இல்லாத புல்லட்டுடன் தயாராக இருந்தார்.

    இதையடுத்து தப்பிச் சென்ற இருவரும் அந்த புல்லட்டில் ஏறினர். பின்னர் புல்லட்டை ஸ்டார்ட் செய்தபோது அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் 3 பேரும் புல்லட்டை தள்ளிக்கொண்டு ஓடினர்.

    இவர்களுக்கு பின்னால் காளியண்ணனும் துரத்திச் சென்றார். இதனிடையே மூட்டு அறுவை சிகிச்சை செய்திருந்ததால் காளியண்ணனால் வேகமாக ஓட முடியவில்லை. இத னால் சிறிது தூரம் ஓடிய காளியண்ணன், திருடன் திருடன் என்று சத்தம் போட்டு உள்ளார்.

    தப்பியோட்டம்

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதை பார்த்த 3 வாலிபர்களும் புல்லட்டை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். மர்மநபர்களை பொதுமக்களும் துரத்தி சென்றனர். ஆனால் அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.

    5 பவுன் நகை

    இதை தொடர்ந்து காளியண்ணனும், அவரது மனைவி நல்லம்மாளும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் டேபிள் டிராயரில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து காளியண்ணன் அவரது மகன் மணிக்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணி இதுகுறித்து நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நல்லூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு புல்லட்டை விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • பிராந்தகம் அருகே தம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 33) . லாரி டிரைவர். வீட்டின் பின்புறத்தில் புதிதாக மாடி வீடு கட்டி வருகிறார்.
    • திடீரென குடிசை வீட்டுக்குள் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்து கரும்புகை வேகமாக வர ஆரம்பித்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிராந்தகம் அருகே தம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 33) . லாரி டிரைவர். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள், தாய், தந்தையுடன் அப்பகுதியில் உள்ள தகரம் வேயப்பட்ட குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார். வீட்டின் பின்புறத்தில் புதிதாக மாடி வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்கான பொருட்கள் வாங்குவதற்காக குமார் வெளியில் சென்று விட்டார்.

    இந்நிலையில் திடீரென குடிசை வீட்டுக்குள் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்து கரும்புகை வேகமாக வர ஆரம்பித்தது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரம் நிறுத்தப்பட்டது.அதை பார்த்த குமாரின் மகன் இதுகுறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரி வித்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்து பார்த்தபோது குடிசை வீட்டில் தீ வேகமாக எரிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் ஓடி வந்து தீயைஅணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடிய வில்லை.

    இது குறித்து வேலா யுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூரை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் குமார் மாடி வீடு கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த ரூ.5 1/2 லட்சம் பணம், 12 பவுன் தங்கச் செயின், வீட்டு பத்திரம், வெள்ளி கொலுசு, வெள்ளி அரணா மற்றும் பல்வேறு ஆவணங்கள், துணிமணி கள், உணவு பொருட்கள், பாத்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து ரூ. 12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின . இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்தாரம்மன் கோவிலின் செயலாளராக ஜெயபாரத் என்பவர் இருந்து வருகிறார்.
    • திருட்டு குறித்து ஜெயபாரத் பழவூர் போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயலாளராக அதே ஊரில் பண்ணைவிளை தெருவை சேர்ந்த ஜெயபாரத்(வயது 49) என்பவர் இருந்து வருகிறார்.

    பூட்டு உடைப்பு

    கடந்த 25-ந்தேதி இவர் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிச்சென்றார். மீண்டும் நேற்று சென்று பார்த்தபோது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கருவறையில் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்கநகை திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து ஜெயபாரத் பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தாரம்மன் கோவிலில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றிக் கொண்டனர்.
    • அவிநாசிபாளையம் போலீசார் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) என்பவர் சந்திரன் அலுவலகத்திற்கு வந்துள்ளார். தனக்கு ரூ. 10 லட்ச ரூபாய் அவசர தேவை இருப்பதாகவும்,அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொ ண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து சந்திரன் கடந்த 12-ம் தேதி காலை கலாராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே பதுங்கியிருந்த 4 நபர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரை ப்பவுன் தங்கச்செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

    பின்னர் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றிக் கொண்டனர். மேலும் 6 பத்திர தாள்களில் சந்திரனின் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடம் இருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டுள்ளது.பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ள னர்.அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் போலீஸ் நிலையம் வந்து புகார் தெரிவித்தார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் கலாராணி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக இருந்த மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று அவிநாசிபாளையம் போலீசார் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் வந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பெருந்தொழுவு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து திருப்பூர் கல்லாங்காட்டை சேர்ந்த சுபாஷ் (32),அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (30 ) மற்றும் திருப்பூர் புது பஸ் நிலையத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் (33 ) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மர்ம நபர் கண்ணாடியை எடுத்து நரேஷ்கமலின் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் மயங்கிய நிலையில் நரேஷ்கமல் கீழே விழுந்தார்.
    • பின்னர் வடமாநில மர்ம நபர் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கமலநாதன்.

    இவரது மகன் நரேஷ்கமல் (வயது 16) .இவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

    இவர் வீட்டில் இருந்தபோது வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை பார்த்து நீ யார் என கேட்டுக் கொண்டிருந்த போதே மர்ம நபர் கண்ணாடியை எடுத்து நரேஷ்கமலின் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் மயங்கிய நிலையில் நரேஷ்கமல் கீழே விழுந்தார். பின்னர் வடமாநில மர்ம நபர் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்த வடமாநில மர்ம நபர் குறித்து தீவிர விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இசக்கி,வசந்தா ஆகியோர் சலவை தொழில் செய்து வருகின்றனர்.
    • பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி வசந்தா.

    திருவிழா

    இவர்கள் இருவரும் ஆலங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சலவை தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் அவர்களது மகள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி உள்ளனர்.

    அப்போது அவர்கள் வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். துணிகள் வீசப்பட்டு இருந்தன.

    மேலும் வீட்டில் உள்ள 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.

    போலீசார் விசாரணை

    இது குறித்து அவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளை யில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடித்தனர்.
    • பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தகிரி (வயது 36). இவரது மனைவி கிராந்தி (32). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டைப் பூட்டி விட்டு, அருகில் வசிக்கும் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கிராந்தி கருப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

    • அவினாசியை ரங்கா நகர் பகுதியை சேர்ந்த கவின் ராஜ் மற்றும் அவர் மனைவியிடம் இருந்து பணம் நகை மற்றும் செல்போன் பறித்து செல்லப்பட்டது
    • புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து ரங்கா நகர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் மகன் கவின் ராஜ் ( வயது 32) .இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் கவின் ராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா என்று கேட்டவாறு குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். எனவே அவர் வீட்டிற்குள் சென்ற போது அவரை பின்தொடர்ந்து உள்ளே சென்ற ஒரு நபர் திடீரென தன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில். வைத்து உன்னிடம் உள்ள பணம் நகைகளை எடுத்து கொடு என மிரட்டியுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி ஓடிவந்து அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று கதறியவாறு கெஞ்சியுள்ளார் .அவரையும் மற்றொரு நபர் தான் வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து மிரட்டியதுடன் அவர்களிடமிருந்து ரூ .10 ஆயிரம் மற்றும் 2 கிராம் மதிப்புள்ள ஒரு ஜோடி கம்மல் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    உடனே கவின் ராஜ் அங்கிருந்த காரில் அவர்களை பின்தொடர்ந்து சென்றார். அப்போது பைக்கில் சென்ற நபர்கள் வஞ்சிபாளையம் அருகே பைக்குடன் கீழே விழுந்து பின்னர் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைந்துவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×