சிறுவனை தாக்கி பணம், நகை கொள்ளை

மர்ம நபர் கண்ணாடியை எடுத்து நரேஷ்கமலின் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் மயங்கிய நிலையில் நரேஷ்கமல் கீழே விழுந்தார். பின்னர் வடமாநில மர்ம நபர் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
சிறுவனை தாக்கி பணம், நகை கொள்ளை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம், கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கமலநாதன்.

இவரது மகன் நரேஷ்கமல் (வயது 16) .இவர் பரமத்தி வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இவர் வீட்டில் இருந்தபோது வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை பார்த்து நீ யார் என கேட்டுக் கொண்டிருந்த போதே மர்ம நபர் கண்ணாடியை எடுத்து நரேஷ்கமலின் தலையில் அடித்து தாக்கியுள்ளார். இதில் மயங்கிய நிலையில் நரேஷ்கமல் கீழே விழுந்தார். பின்னர் வடமாநில மர்ம நபர் வீட்டிற்குள் சென்று பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்த வடமாநில மர்ம நபர் குறித்து தீவிர விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com