பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை திருட்டு
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தெய்வேந்திரன்.

இவரது மனைவி கோமளவல்லி (வயது 48).

சம்பவத்தன்று காலையில் இவர் தனது பிள்ளையின் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார்.

திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

அதிர்ச்சி அடைந்த கோமளவல்லி உள்ளே சென்று பார்த்தார்.

பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்த அவர் தஞ்சை தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com