search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் அருகே குடிசை வீடு தீப்பிடித்து ரூ.12 லட்சம்மதிப்பிலான நகை, பணம் எரிந்து நாசம்
    X

    குடிசை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளதையும் வீட்டில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் தீயில் எரிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    பரமத்திவேலூர் அருகே குடிசை வீடு தீப்பிடித்து ரூ.12 லட்சம்மதிப்பிலான நகை, பணம் எரிந்து நாசம்

    • பிராந்தகம் அருகே தம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 33) . லாரி டிரைவர். வீட்டின் பின்புறத்தில் புதிதாக மாடி வீடு கட்டி வருகிறார்.
    • திடீரென குடிசை வீட்டுக்குள் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்து கரும்புகை வேகமாக வர ஆரம்பித்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பிராந்தகம் அருகே தம்ம நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 33) . லாரி டிரைவர். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள், தாய், தந்தையுடன் அப்பகுதியில் உள்ள தகரம் வேயப்பட்ட குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார். வீட்டின் பின்புறத்தில் புதிதாக மாடி வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்கான பொருட்கள் வாங்குவதற்காக குமார் வெளியில் சென்று விட்டார்.

    இந்நிலையில் திடீரென குடிசை வீட்டுக்குள் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்து கரும்புகை வேகமாக வர ஆரம்பித்தது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரம் நிறுத்தப்பட்டது.அதை பார்த்த குமாரின் மகன் இதுகுறித்து அவரது தந்தைக்கு தகவல் தெரி வித்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்து பார்த்தபோது குடிசை வீட்டில் தீ வேகமாக எரிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தில்இருந்தவர்கள் ஓடி வந்து தீயைஅணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடிய வில்லை.

    இது குறித்து வேலா யுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூரை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

    இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் குமார் மாடி வீடு கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த ரூ.5 1/2 லட்சம் பணம், 12 பவுன் தங்கச் செயின், வீட்டு பத்திரம், வெள்ளி கொலுசு, வெள்ளி அரணா மற்றும் பல்வேறு ஆவணங்கள், துணிமணி கள், உணவு பொருட்கள், பாத்திரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து ரூ. 12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின . இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×