மாயமான கணவரை கண்டுபிடித்து தருமாறு 6 ஆண்டுகளுக்கு பிறகு புகார் கொடுத்த மனைவி

முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது.குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை.
மாயமான கணவரை கண்டுபிடித்து தருமாறு 6 ஆண்டுகளுக்கு பிறகு புகார் கொடுத்த மனைவி
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 28) இவருடைய மனைவி பிரேமா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாக கூறப்படு கிறது. பிரேமா 7 மாத கர்ப்பிணியாக இருந்த போது கணவர் முருகேசன் தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தில் வசிக்கும் பெற்றோருடன் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் பிரேமாவுக்கு 10 மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு சென்ற முருகேசன் இது வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இது பற்றி பிரேமா அவரது மாமியார் வீட்டில் பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது சரியான தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைக்குமாறு புகார் அளித்தார். பிரேமா கொடுத்த புகாரின் அடிப்ப டையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com