search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AgustaWestland scam"

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலின் சி.பி.ஐ. விசாரணை காவலை மேலும் 5 நாட்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து கடந்த 2016-ம் இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் இத்தாலி கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

    துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஐந்தாம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழலில் இந்தியர்களுக்கு பலகோடி ரூபாய் கைமாறியது தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால், அவரை தங்களிடம் விசாரணை காவலுக்கு ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு நீதிபதியிடம் சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டார்.

    கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் இன்றுடன் முடிவடைவதால் கிறிஸ்டியன் மைக்கேல் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடன் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதைதொடர்ந்து, மைக்கேலை மேலும் 5 நாள் (15-ம் தேதிவரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

    மேலும், மைக்கேலை அவரது வழக்கறிஞர் காலை அரை மணி நேரமும் மாலையில் அரை மணி நேரமும் சந்தித்து பேச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #ChristianMichel,#AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
    ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு கைமாறிய வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 5 நாள் விசாரணை காவல் விதிக்கப்பட்டுள்ளது. #AgustaWestlandscam #CBI
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து கடந்த 2016-ம் இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் இத்தாலி கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம்  நேற்றிரவு அவர் ஒப்படைக்கப்பட்டார். துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த ஊழலில் இந்தியர்களுக்கு பலகோடி ரூபாய் கைமாறியது தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

    அதனால், அவரை தங்களிடம் விசாரணை காவலுக்கு ஒப்படைக்க வேண்டும் என சிறப்பு நீதிபதியிடம் சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டார்.

    இதற்கிடையில், கிறிஸ்டியன் மைக்கேலுக்கு ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்த அவரது வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தேவைப்பட்டால் நீதிமன்ற காவலில் வைக்கலாம் என்ற அவரது கருத்தை நிராகரித்த நீதிபதி, கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
     #ChristianJamesMichel,#AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
    ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு கைமாறிய அகஸ்டா வெஸ்ட்லான்ட் ஹெலிகாப்டர் ஊழலில் துபாயில் இருந்த பிரிட்டன் நாட்டு இடைத்தரகர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். #ChristianJamesMichel #AgustaWestlandscam
    துபாய்:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

    இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து கடந்த 2016-ம் இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் இத்தாலி கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் இன்றிரவு அவர் ஒப்படைக்கப்பட்டார். துபாயில் இருந்து விமானம் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். #ChristianJamesMichel #AgustaWestlandscam #VVIPchopperscam 
    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டதாக கைது செய்யபட்ட கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #AgustaWestland #AgustaWestlandScam
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.362 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

    பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக இத்தாலியில் தொடரப்பட்ட வழக்கில், லஞ்சம் வழங்கியதற்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டது. குறிப்பாக, தீர்ப்பில் தியாகியின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.

    இதுதொடர்பாக எஸ்.பி.தியாகி உட்பட 14 பேர் மீது சிபிஐ-யும், 21 பேர் மீது அமலாக்கத் துறையும் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன. 

    அகஸ்டா வெஸ்ட் லேண்ட் நிறுவனத்தின் இந்திய தலைவர் பீட்டர் ஹுலெட்டுக்கு இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், 2008-ல் எழுதிய ஒரு கடிதத்தில், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தின் பின்னணியில், முக்கிய காரணியாக, 'சிக்னோரா காந்தி' செயல்பட்டதாக, குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே மைக்கேல்லுக்கு எதிராக அமலாக்கத்துறை 2016-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையில், மைக்கேல் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு துபாய் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் மைக்கேலை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டதாக கிறிஸ்டியன் மைக்கேல் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளதால், அவர் இந்தியா கொண்டு வரப்பட்டால், இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என நம்பப்படுகிறது. #AgustaWestland #AgustaWestlandScam #ChristianMichel

    ×