என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த முதியவர்  போலீசில் ஒப்படைப்பு
    X

    கோப்பு படம் 

    மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த முதியவர் போலீசில் ஒப்படைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    • முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் பஸ் நிலையம் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் என கூட்டமாகவே காணப்படும். இன்று காலை மார்த்தாண்டத்தில் இருந்து இனையம் செல்லக்கூடிய பஸ்சுக்காக பயணிகள் காத்திருந்தனர். பஸ் வந்ததும் பயணிகள் ஏறி அமர்ந்தனர்.

    அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் பெண்கள் இருக்கையின் பின்னால் சீட்டில் அமர்ந்தார். சற்று நேரத்தில் முன்னால் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் திடீரென சத்தம் போட்டார். உடனடியாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் முதியவரை பிடித்து தர்ம அடி கொடுத்து பிடித்து வைத்திருந்தனர்.

    பின்னர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக பொதுமக்கள் தகவல் அளித்தனர். மார்த்தாண்டம் போலீசார் உடனடியாக வந்து அந்த முதியவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×