search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "encroached lands"

    • புன்செய் நிலத்தில் 16 தனிநபர்கள் வீடுகள் கட்டியும், நன்செய் நிலத்தினை தனிநபர் ஒருவரும் ஆக்கிரமித்திருந்தனர்.
    • “எச்.ஆர்.சி.இ.” என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், சித்தாய்மூர், சுவர்ணதாபனேஸ்வரர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமாக திருத்துறைப்பூண்டி வட்டம், தில்லைவிளாகம் கிராமத்தில் 23.88 ஏக்கர் புன்செய் நிலம் மற்றும் 2.33 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளன. புன்செய் நிலத்தில் 16 தனிநபர்கள் வீடுகள் கட்டியும், நன்செய் நிலத்தினை தனிநபர் ஒருவரும் ஆக்கிரமித்திருந்தனர்.

    இந்நிலையில் நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் குமரேசன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட உதவி ஆணையர் ராணி ஆகியோர் முன்னிலையில் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு "எச்.ஆர்.சி.இ." என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.8.28 கோடியாகும்.

    மேலும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காடு அனுமந்தராயர் சுவாமி கோவிலுக்குச் சொந்தமான 10.98 ஏக்கர் நிலம் மற்றும் அதன் உபகோவிலான கோனாபுரம், லட்சுமி நாராயணசுவாமி கோவிலுக்குச் சொந்தமான 2.14 ஏக்கர் நிலம் தனிநபர் பெயரில் பட்டா பெற்றிருப்பதை அறிந்து திருப்பூர் மாவட்ட வருவாய் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் கோவில்களுக்கு சாதகமாக பட்டா மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இன்று திருப்பூர் மண்டல இணை ஆணையரின் அறிவுரையின்படி, திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி முன்னிலையில், காவல்துறை மற்றும் வருவாய்துறை உதவியோடு கோவில்களின் நிலம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 3 கோடி ஆகும். ஆக மொத்தம் இன்றைய தினம் மீட்கப்பட்ட 3 கோவில்களுக்குச் சொந்தமான நிலத்தின் மதிப்பு ரூ.11.28 கோடியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.
    • 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.

    தாராபுரம்:

    தமிழகத்தில் அதிக அளவு விவசாய நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த நில சுவான்தாரா்களிடம் இருந்து நில உச்சவரம்பு சீா்திருத்த சட்டத்தின்கீழ் விவசாய நிலங்களை கையகப்படுத்திய தமிழக அரசு, அவற்றை நிலமற்ற ஏழை விவசாய கூலி தொழிலாளா்களுக்கு பிரித்து வழங்கியது.

    அதன்படி திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியை சோ்ந்த தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் பகுதிகளில் நில சுவான்தாரா்களிடம் இருந்து கையகப்படுத்திய 55 ஏக்கா் விவசாய நிலத்தை பிரித்து 45 பயனாளிகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு அரசு நில பட்டா வழங்கியது.பட்டா பெற்ற விவசாயிகளுக்கு அவா்களுக்கான நிலத்தை அளந்து பிரித்து எடுப்பதில் கடந்த 19 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடைபெற்று வந்தது. மேலும் அந்த நிலங்கள் நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அரசு வழங்கிய நிலப்பட்டாக்களுக்கு உரிய இடத்தை 45 பயனாளிகளுக்கும் உடனடியாக பிரித்து நில அளவீடு செய்து வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.

    இதைத்தொடா்ந்து திருப்பூா் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழுத் தலைவருமான கே.சுப்பராயன், மாநில துணைச்செயலா் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி ஆகியோா் அரசு வழங்கிய உச்சவரம்பு நிலத்துக்கான பட்டாக்களை பெற்றிருந்த 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.இதில் சிபிஐ., கட்சியின் தாராபுரம் பகுதி நிா்வாகிகள், பட்டாதாரா்கள் கலந்துகொண்டனா். 

    • நீரோடைகள், அணைகள் ஆகிய பகுதிகளில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.
    • அரசுக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை மீட்டு வருவா ய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா் ஆகிய வருவாய் கோட்டங்களில் கால்வாய்கள், நீரோடைகள், அணைகள் ஆகிய பகுதிகளில் எவ்வளவு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் அளவீடு செய்து வருகின்றனா்.

    இந்த நிலையில் குன்னூர் டென்ட்ஹில் அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து தேயிலை பயிரிட்டு இருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் மதிப்பு ரூ.20 கோடி ஆகும். இதைத்தொடர்ந்து கலெக்டர் அம்ரித் உத்தரவின்பேரில் குன்னூர் தாசில்தார் சிவக்கு மார் தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆக்கிரமிப்பு நிலத்தில் விவசாய பணிகள் ஏதும் மேற்கொள்ளக் கூடாது எனவும், அதில் இருந்து வெளியேறுமாறும் வருவாய்த்துறை சாா்பில் நோட்டீஸ் மற்றும் தடுப்புகள் வைத்து அறிவிப்பு செய்யப்பட்டது.

    பின்னர் அரசுக்கு சொந்தமான 1.60 ஏக்கர் நிலத்தை மீட்டு வருவா ய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.மேலும் அரசு நிலங்களை ஆக்கிரமி ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி க்கொள்ள வேண்டும் என்றனர்.

    ×