என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா பொட்டலங்கள்"

    • ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ராமேசுவரம்:

    வடமாநிலங்களில் இருந்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில்களில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் திருச்சி ரெயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையில் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வடமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை புவனேஸ்வரிலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த புவனேஸ்வர் விரைவு ரெயிலில் போலீசார் சோதனை செய்தபோது ரெயிலின் பின்புறம் உள்ள முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பை ஒன்றை எடுத்து சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் 5 பொட்டலங்களில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்ததையடுத்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார் ராமேசுவரம் ரெயில்வே காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்தது யார் என்பது குறித்து ரெயில்வே நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் இருக்கும் என ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு கவரை அருகே போலீசார் திடீர் சோதனை மேற்கொ ண்டனர்.
    • அவர்களிடம் இருந்து 410 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக விழுப்புரம் மாவட்ட தனிபிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் செஞ்சியை அடுத்த அப்பம்பட்டு கவரை அருகே போலீசார் திடீர் சோதனை மேற்கொ ண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 வாலிபர்களை விசாரணை செய்ததில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

    மேற்படி அவர்கள் செஞ்சி வட்டம் கடகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (வயது 27), கவரை கிராமத்தைச் சேர்ந்த வரகுண பாண்டியன் மகன் தருண்குமார்(20) என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 410 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் நேற்று மாலை திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போ லீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆனத்தூர் காலனியை சேர்ந்த ரவி மகன் ஜான் என்கிற ராஜ் (வயது 19), சென்னை புழல் பகுதியை சேர்ந்த மோகன் மகன் அபினேஷ் (20), சந்திரசேகரன் மகன் சுபாஷ் (22) ஆகிய 3 பேரும் ஆனத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட போலீசார் கஞ்சா விற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்துனர்.அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 3 வாலிபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×