search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MR Vijayabaskar"

    • எங்கள் மாவட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் செந்தில் பாலாஜியும் எலியும்-பூனையும் தான்.
    • செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிரமாக இருந்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி இவ்வளவு எளிதாக அமலாக்கத்துறையிடம் சிக்கினார் என்பதற்கு கரூர் வாசிகள் கூறுவதாவது:-

    எங்கள் மாவட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் செந்தில் பாலாஜியும் எலியும்-பூனையும் தான். பொருளாதாரத்திலும், செல்வாக்கிலும் இருவருமே சளைத்தவர்கள் அல்ல. கடந்த தேர்தலில் செந்தில்பாலாஜியிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தோல்வியை தழுவியது தெரிந்ததே. அதனால் எப்படியாவது செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிரமாக இருந்தார்.

    அதற்கான சந்தர்ப்பமும் அவருக்கு வாய்த்தது. அதாவது எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில்தான் அண்ணாமலையின் சகோதரி வாடகைக்கு குடியிருக்கிறார். அண்ணாமலை கரூருக்கு வரும் போதெல்லாம் சகோதரி வீட்டுக்கு வருவதுண்டு. அப்போது மரியாதை நிமித்தமாக இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

    அந்த நேரத்தில்தான் செந்தில்பாலாஜி தொடர்பான பல தகவல்களை எம்.ஆர்.விஜயபாஸ்கர் திரட்டி கொடுத்ததாகவும் அதை வைத்தே அண்ணாமலை தனது ஆட்டத்தை தொடங்கி செந்தில் பாலாஜியை ஆட்டம் காண வைத்ததாகவும் சொல்கிறார்கள்.

    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் கொடுத்து திமுக தில்லுமுல்லு செய்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    கரூர்:

    கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் வி.வி.செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இந்த தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் தி.மு.க.வை சேர்ந்த செந்தில்பாலாஜி கார்வழி ஊராட்சியில் 2,000ரூபாயை ஜெராக்ஸ் எடுத்து வினியோகித்து விட்டு, பணம் மாலையில் கொடுப்போம் என கூறி தில்லுமுல்லு செய்துள்ளார். அரவக்குறிச்சியில் இதைவிட கேவலமாக வேலை செய்ய எதுவுமில்லை.

    நம்பர் எழுதி ஸ்டார் குறியீடு போட்டு டோக்கன், ரூ.2,000-ன் ஜெராக்ஸ் தாள் ஆகியவற்றை மஞ்சள் துண்டு போட்டிருந்தவர்களே (தி.மு.க.) வினியோகித்தனர். பச்சை துண்டுபோட்டிருந்த (அ.தி.மு.க.) எங்களது ஆட்கள் தான் அவர்களை பிடித்தனர். டோக்கன் கொடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள்.


    ஆர்.கே.நகரில் இது போல் டோக்கன் வினியோகித்து ஒரு ஆளை ஜெயிக்க வைத்தனர். அந்த டோக்கன் எல்லாம் அரவக்குறிச்சியில் எடுபடாது. டோக்கன் விவகாரத்தை விடுத்து வேறு சில கருத்துக்களையும் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார். மின்சாரம் திருடியதாகவும், அதற்காக அபராதம் நாங்கள் செலுத்தியதாகவும் கூறியிருக்கிறார். இன்று அதன் விவர நகலை தருகிறேன். விவசாயத்துக்கு போகிற தண்ணீரை ஜெனரேட்டர் பழுதின் காரணமாக தண்ணீரை எடுத்ததற்காக அபராதம் விதித்தனர்.

    மின்சாரம் திருடி பிழைக்க வேண்டிய அவசியமில்லை. அந்த பரம்பரையில் நான் பிறக்கவும் இல்லை. இவர்களை மாதிரி திருட்டு சாராயம் காய்ச்சி பாட்டிலில் அடைத்து விற்கவில்லை. மின்சாரம் திருடியதாக இனி குற்றம்சாட்டினால், அது தவறு என்பதற்குரிய ஆதாரத்தை நான் தருகிறேன். டோக்கன் கொடுப்பது உள்ளிட்ட பல வேலைகளை இன்று செய்து விட்டார்கள். இதைவிட கேவலமாக அரசியல் செய்ய முடியாது. ஆள் கடத்தலில் கை தேர்ந்தவர் எதிர்க்கட்சி வேட்பாளர். கருத்து கணிப்பு இருக்கட்டும். நிச்சயமாக அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #pongalfestival

    கரூர்:

    கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.

    மேலும் அதில் தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கக் கூடிய ‌ஷரத்துக்களை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகளோடு சேர்ந்து மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இது சம்பந்தமாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் உறுப்பினர்களும் மனு கொடுத்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வரும் மோட்டார் வாகன திருத்த சட்டத்திலுள்ள 184 ‌ஷரத்துக்களில், 5 ‌ஷரத்துக்கள் தமிழகத்தின் உரிமையை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இதில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என கூறியுள்ளோம்.

    திருத்தப்படா விட்டால் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்.

    போக்குவரத்து கழகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை ஏதும் இல்லை. ஊதிய உயர்வு, டீசல் விலை உயர்வு போன்றவற்றை சமாளித்து தான் போக்குவரத்து கழகத்தை இயக்கி வருகிறோம். தேவையில்லாத இடங்களில் பணியாற்றுபவர்களை தேவையுள்ள இடங்களில் பணி மாற்றம் செய்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministermrvijayabaskar #pongalfestival

    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் கரூர் மாவட்டத்தில் 155 ஏக்கர் நிலங்கள் பாதிப்பு அடைந்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #ministermrvijayabaskar #cauveryriver
    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டத்தில் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் கரூர் மாவட்டத்தில் 90 குடியிருப்பு பகுதிகளிலும் 155 ஏக்கர் விளை நிலங்களிலும் வெள்ள நீர் புகுந்து உள்ளது. கரூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை.  

    அமராவதி ,பவானி, நொய்யல் போன்ற ஆறுகளில் இருந்து காவிரியில் கலந்து வரும் நீரின் அளவானது சுமார் 2 லட்சத்து 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் 90 குடும்பத்தை சேர்ந்த 275 பேர் வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பெட்ஷீட், பாய் ,உணவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை ,காவல்துறை ஆகிய 3 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலங்களை கணக்கெடுப்பு செய்த பிறகு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய இழப்பீடு பெற்றுத்தரப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministermrvijayabaskar #cauveryriver
    ஊட்டி சுற்றுலா நகரம் என்பதால் கர்நாடகா மாநில பஸ்களை போன்று, தூங்கும் வசதியுடன் கூடிய 2 பஸ்கள் ஊட்டி-பெங்களூரு இடையே இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி-குன்னூர் மலைப்பாதையில் மந்தாடா என்ற பகுதியில் கடந்த 14-ந் தேதி அரசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் கண்டக்டர் உள்பட 9 பேர் பலியானார்கள். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்துக்கு போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சமும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும் என தலா ரூ.7 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.

    மேலும் பலியான 2 பேர் குடும்பத்துக்கு அரசு ஆணையின் படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல்- அமைச்சர் அறிவித்த ரூ.2 லட்சமும், போக்குவரத்து கழக காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2½ லட்சம் என தலா ரூ.4½ லட்சம் வீதம் மொத்தம் ரூ.51 லட்சம் வழங்கப்பட்டது. இந்த விபத்தில் பலியானவர்களில் பெங்களூருவை சேர்ந்த ஜெயஸ்ரீ விவரம் பெறப்படாததால் நிவாரண நிதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகங்கள் சிறப்பாக இயங்க அரசு மூலம் ரூ.65 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் இந்தியாவிலேயே விபத்துகள் குறைவு, சரியான தகவல் பரிமாற்றங்கள் போன்றவற்றில் தமிழ்நாடு மாநிலம் முதல் இடம் வகிக்கிறது. தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடப்பாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்டத்துக்கு 39 பஸ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, 13 புதிய பஸ்கள் உடனடியாக ஊட்டி பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. மேலும் ஊட்டி சுற்றுலா நகரம் என்பதால் கர்நாடகா மாநில பஸ்களை போன்று, தூங்கும் வசதியுடன் கூடிய 2 பஸ்கள் ஊட்டி-பெங்களூரு இடையே இயக்கப்பட உள்ளது.

    நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பஸ்களின் மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் ஒழுகுவதை தடுக்க தார்பாய் சீட்டுகள் போடப்பட்டு, அதன் மீது சீட் அமைக்கப்படும். அரசு போக்குவரத்து கழகத்தில் போதுமான உதிரி பாகங்கள் இல்லை என்று கூறுவது தவறானது. எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அதுபோன்ற தவறான தகவலை மக்கள் இடையே தெரிவித்து வருகின்றனர். அனைத்து போக்குவரத்து கழகத்திலும் தேவையான உதிரி பாகங்கள், கூடுதல் டயர்கள் இருக்கின்றன.

    தமிழகம் முழுவதும் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 12 ஆயிரம் பஸ்கள் மலைப்பகுதியை சார்ந்து இயக்கப்படுகிறது. நீலகிரி மலைப்பகுதி என்பதாலும், வளைவுகளில் சிரமம் இல்லாமல் இயக்கும் வகையில் சிறிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நீலகிரி, கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் முழுமையாக தனியார் பஸ்கள் அரசுடைமை ஆக்கப்பட்டு, அரசு பஸ்களே இயக்கப்படுகின்றன. இது அரசின் கொள்கையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×