என் மலர்
இந்தியா

மக்களவையில் நிறைவேறிய புதிய வருமான வரி மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?
- புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
- TDS திருத்த அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 6 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மசோதா 2025 எந்த எதிர்க்கட்சி விவாதமும் இல்லாமல் மக்களவையில் நேற்று நிறைவேறியது.
இந்த மசோதா ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்.
வருமான வரிச் சட்டம், 1961-க்குப் பதிலாக இந்தப் புதிய மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய மசோதா பழைய சிக்கலான வரி அமைப்பை சுமார் 50% எளிதாக்குகிறது.
வருமான வரி மசோதா 2025 எந்த புதிய வரிகளையும் விதிக்காது. இது தற்போதுள்ள வரி அடுக்குகள் மற்றும் விகிதங்களை மாற்றாது.
மேலும், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான நிலுவைத் தேதிகள், வருமான வரி அடுக்குகள் மற்றும் மூலதன ஆதாயங்களில் எந்த மாற்றங்களும் இருக்காது.
இந்த மசோதாவில் பிரிவு 80M, குறைந்தபட்ச வரி (MAT & AMT), மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தொடர்பான வரி விதிகள் உள்ளிட்டவற்றில் முக்கிய மாற்றங்கள் உள்ளன.
புதிய வரி முறையை தேர்வு செய்கின்ற நிறுவனங்கள் தற்போது 1961 சட்டத்தின் முந்தையப் பிரிவு 80 M இன் கீழ் விலக்குகளை பெற உரிமை பெறுவார்கள்.
குறைந்தப்பட்ச மாற்று வரி (MAT) மற்றும் மாற்று குறைந்தபட்ச வரி (AMT) விதிகளை தனித்தனி பகுதிகளாக பிரிப்பதன் மூலம் புதிய மசோதா தெளிவுப்படுத்துகிறது.
எளிமையான புரிதலுக்காக 'முந்தைய ஆண்டு' மற்றும் 'மதிப்பீட்டு ஆண்டு' என்பதற்குப் பதிலாக 'வரி ஆண்டு' என்ற ஒருங்கிணைந்த கருத்து இப்போது இருக்கும்.
TDS திருத்த அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 6 ஆண்டுகளில் இருந்து 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு இடையேயான ஈவுத்தொகையில் ரூ.80 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும்.
பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள், புதிய சொத்துகளில் மூலதன ஆதாயங்களை மீண்டும் முதலீடு செய்வது வருமானத்திற்கான பயன்பாடாக கருதப்படும்.
மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடப்படாத நன்கொடைகளுக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.






