என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற்ற மத்திய அரசு.. ஏன்?
    X

    புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற்ற மத்திய அரசு.. ஏன்?

    • பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
    • இது வரி முறையில் வெளிப்படைத்தன்மையையும் எளிமையையும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

    கடந்த பிப்ரவரி 13 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.

    டெல்லியில் இன்று, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மசோதா திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் நேரடி வரி கட்டமைப்பின் அடிப்படையாக இருந்து வரும் 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தை மாற்றும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

    இந்நிலையில் பைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கி, இந்த மசோதாவின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த புதிய பதிப்பு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய மசோதா ஆகஸ்ட் 11 ஆம் தேதி மக்களவையில் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும். இது வரி முறையில் வெளிப்படைத்தன்மையையும் எளிமையையும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

    Next Story
    ×