என் மலர்
புதுச்சேரி

தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.
தனியார் தொழிற்சாலையை பொதுமக்கள் முற்றுகை
- திருபுவனையை அடுத்த கொத்தாபுரி நத்தம் ஏரிக்கரை ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அதில் பழுதான ரோலிங் ஷட்டர் சீரமைக்கும் பணி நடந்தது.
- அப்போது எதிர்பாராத விதமாக ரோலிங் ஷட்டர் மணிகண்டனின் தலையில் விழுந்தது. அப்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை மற்ற தொழிலாளிகள் அரியூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
திருபுவனையை அடுத்த கொத்தாபுரி நத்தம் ஏரிக்கரை ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அதில் பழுதான ரோலிங் ஷட்டர் சீரமைக்கும் பணி நடந்தது.
தமிழக பகுதியான கண்டமங்கலம் அருகே சின்ன பாபு சமுத்திரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது30 ). மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகபாலன், சக்திவேல் ஆகிய 3 பேரும் ஷட்டர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ரோலிங் ஷட்டர் மணிகண்டனின் தலையில் விழுந்தது. அப்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை மற்ற தொழிலாளிகள் அரியூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவரது மனைவி சரசு கொடுத்த புகாரின் பேரில் திருபு வனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மணிகண்ட னின் மனைவி சரசு மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மணிகண்ட னுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் மற்றும் அவருக்கு தொழிற்சாலை மூலம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் திருபுவனை போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.






