என் மலர்
நீங்கள் தேடியது "women employees"
- வெவ்வேறு தொழிலாளர் சட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பின் மூலம் கூடுதல் விடுப்பை அறிமுகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை
- அறிவிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை
பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் அரசு அறிவிப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) இடைக்கால உத்தரவில் நிறுத்தி வைத்தது.
பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த அவிராட்டா ஏஎஃப்எல் இணைப்பு அமைப்புகள் லிமிடெட் தாக்கல் செய்த இரண்டு தனித்தனி மனுக்கள் மீது நீதிபதி ஜோதி இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். "மாதவிடாய் சுழற்சியின் போது விடுப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் நலன் தொடர்பான எந்த தனிச்சட்டமும் இல்லை. எனவே பல்வேறு தொழிலாளர் சட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பின் மூலம் கூடுதல் விடுப்பை அறிமுகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை" என்ற வாதத்தை மனுதாரர் தரப்பு முன்வைத்தது.
மேலும் "மாதவிடாய் விடுப்பு கொள்கை 2025" மூலம் கூடுதல் விடுப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, மனுதாரர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனோ அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து அரசின் ஆணைக்கு இடைக்கால தடைவிதித்த நீதிபதி, மாதவிடாய் விடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
கர்நாடக அரசின் அறிவிப்பு என்ன?
அரசு, தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் நிரந்தர, ஒப்பந்த, வெளிகுத்தகை உள்பட எந்த ரீதியில் பணியாற்றினாலும் 18 முதல் 52 வயது வரையிலான அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதத்திற்கு ஒரு மாதவிடாய் விடுப்பு உண்டு. இந்த விடுப்புக்கு ஊதியமும் வழங்கப்படும். வருடத்திற்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை. ஆனால் அந்தந்த மாத விடுப்புகளை அந்த மாதங்களிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். சேர்த்து வைத்து எடுக்கக்கூடாது. இதற்கு எந்த மருத்துவ சான்றிதழும் சமர்பிக்க தேவையில்லை எனவும் உத்தரவிடப்பட்டது.
- அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரம் நீண்ட காலமாக அரசின் கவனத்தை ஈர்த்தது.
- அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் மட்டுமே இருந்தால் அனைவரும் நிர்வாகத்தின் நலன் கருதி ஒரே நேரத்தில் இந்த சலுகை பெறக்கூடாது.
புதுச்சேரி:
புதுவை அரசு துறைகளில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை நேரத்தில் 2 மணி நேர பணி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
பணிச்சலுகை அறிவிப்பை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசையும் கூட்டாக வெளியிட்டனர். இந்த நிலையில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி உள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது :-
வெள்ளிக்கிழமைகளில் பெண்களின் பாரம்பரிய வழிபாடுகள் மற்றும் பூஜையை கருத்தில் கொண்டு புதுவை அரசியல் பணிபுரியும் பெண் அரசு ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரம் நீண்ட காலமாக அரசின் கவனத்தை ஈர்த்தது. இதனை கவனமாக பரிசீலனை செய்து கவர்னர் வெள்ளிக்கிழமைகளில் காலை 8.45 மணி முதல் 10.45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் .
காலை 10.45 மணிக்கு மேல் எந்த அனுமதியும் வழங்கப்படாது ஒரு மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் மட்டுமே இதற்கான அனுமதி அளிக்கப்படும். சாதாரண விடுப்புக்கு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். தாமதமாக வருகை தந்தால் அதற்கான பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அது 10.55 மணிக்கு மூடப்படும்
அரசு பணி எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. அலுவலகத்தில் பெண் அரசு ஊழியர்கள் மட்டுமே இருந்தால் அனைவரும் நிர்வாகத்தின் நலன் கருதி ஒரே நேரத்தில் இந்த சலுகை பெறக்கூடாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி சுழற்சி அடிப்படையில் அவர்களுக்கு பணிநேர சலுகை கிடைக்க அனுமதிக்க வேண்டும் .
இந்தச் சலுகை சுகாதாரத்துறை காவல்துறை மற்றும் கல்வித்துறை போன்ற அத்தியாசிய சேவைகள் நேரடி பொது சேவை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு கிடையாது .
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






