என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் குழந்தைகளின் விசா விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடகா ஐகோர்ட்
    X

    பாகிஸ்தான் குழந்தைகளின் விசா விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடகா ஐகோர்ட்

    • விசா நீட்டிப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
    • பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உட்பட பல முடிவுகளை மத்திய அரசு மனப்பூர்வமாக எடுத்துள்ளது.

    பெங்களூரு:

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக மைசூரு மாவட்டத்தை சேர்ந்த ராம்ஷா ஜஹான் என்ற பெண், பாகிஸ்தான் தந்தைக்கு பிறந்த தனது 3 மைனர் குழந்தைகள், மனிதாபிமான அடிப்படையில் வருகிற 15-ந் தேதி வரை விசா நீட்டிப்பு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை ஒற்றை நீதிபதி அமர்வு விசாரித்தது. மனுதாரரின் வக்கீல் மனுவை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும் என்று வாதிட்டார். திருமண விழாவை முடித்துக்கொண்டு மனுதாரர் 15-ந் தேதி நாட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறினார்.

    இதையடுத்து நீதிபதி "இது நமது மனிதகுலத்தின் மீதான தாக்குதல், பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உட்பட பல முடிவுகளை மத்திய அரசு மனப்பூர்வமாக எடுத்துள்ளது. அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

    Next Story
    ×