காந்தாரா வசூல் சாதனையை முறியடித்த துரந்தர்... உலகளவில் அதிக வசூல் செய்த இந்தியப் படம்!

6 வளைகுடா நாடுகளில் தடைதுரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளது.
காந்தாரா வசூல் சாதனையை முறியடித்த துரந்தர்... உலகளவில் அதிக வசூல் செய்த இந்தியப் படம்!
Published on

பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் துரந்தர். இப்படத்தில் மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. 

பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், வசூல் சாதனையும் படைத்து வருகிறது.

அதன்படி இதுவரை துரந்தர் திரைப்படம் உலகளவில் ரூ. 870 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 855 கோடி வசூல் செய்து, 2025ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த படமாக உள்ள காந்தாரா சாப்டர் 1-ன் சாதனையை முறியடித்துள்ளது.  

X

Maalai Malar
www.maalaimalar.com