உச்சக்கட்ட பாக்ஸ் ஆஃபீஸ் Clash: ஒரே நாளில் வெளியாகும் டாக்சிக் & துரந்தர் 2!

டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது.துரந்தர் தி ரிவெஞ்ச் மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.
உச்சக்கட்ட பாக்ஸ் ஆஃபீஸ் Clash: ஒரே நாளில் வெளியாகும் டாக்சிக் & துரந்தர் 2!
Published on

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "டாக்சிக்". கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இந்தப் படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது. நீண்ட கால படப்பிடிப்பில் உள்ள போதிலும், டாக்சிக் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது.

கே.ஜி.எஃப். 2 படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின் நடிகர் யஷ் நடிக்கும் படம் என்பதால் "டாக்சிக்" படத்திற்கு துவக்கம் முதலே எதிரபார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் "துரந்தர் தி ரிவெஞ்ச்" மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

பான் இந்தியா அளவில் கே.ஜி.எஃப். 2 மற்றும் துரந்தர் திரைப்படங்கள் வசூலில் ரூ. 1000 கோடியை கடந்து வெற்றி பெற்றன. இந்த நிலையில், யஷ் நடித்துள்ள டாக்சிக் மற்றும் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் தி ரிவெஞ்ச் ஒரே நாளில் வெளியாவது உறுதியாகி இருக்கிது.

எனினும், பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இரு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது போட்டியை வலுப்படுத்தும் என்பதோடு, எந்தப் படம் வெற்றி பெறும் என்ற கேள்வியையும் எழுப்ப தவறவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com