யாஷ் நடிக்கும் Toxic படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்?

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
யாஷ் நடிக்கும் Toxic படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்?
Published on

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.

இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையானால் அனிருத் இப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் காலடி பதிப்பார்.

X

Maalai Malar
www.maalaimalar.com