என் மலர்
சினிமா செய்திகள்

யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா? - படக்குழு விளக்கம்
- நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ். ராக்கி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப். திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.
இதைத் தொடர்ந்து நடிகர் யாஷ் "டாக்ஸிக்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல் பரவின. ஆனால் திட்டமிட்டபடி டாக்ஸிக் படம் மார்ச் மாதம் 19-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.






