என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shahid Kapoor"

    • ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்
    • அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த தொண்டு நிறுவன நிதி திரட்டல் கிரிக்கெட் போட்டியில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் விளையாடினார்.

    இது தொடர்பான புகைப்படங்களை லார்ட்ஸ் மைதானம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அண்மையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் போராடி இறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

    • விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஃபார்ஸி வெப் தொடர்.
    • இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும்.

    விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஃபார்ஸி வெப் தொடர். இத்தொடரை ராஜ் & டிகே இருவரும் இணைந்து இயக்கினர். இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும்.இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும்.

    இத்தொடரில் விஜய் சேதுபதி காவல் அதிகாரியாகவும், ஷாஹித் கபூர் மற்றும் அவரது நண்பரும் கள்ள நோட்டு அடித்து அதனை வியாபாரம் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பர். முதல் சீசன் முடிவில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இடையே சண்டை வலுக்கும் மேலும் கதையின் முக்கிய வில்லனான மன்சூர் தலாலை வைத்து முடியும், அடுத்த சீசனுக்கான தொடக்கத்தையும் அங்கு கொடுத்திருப்பர்.

    இந்நிலையில் ஃபார்சி பாகம் சீசன் 2 பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ஃபார்ஸி 2 தொடரின் வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு நடுவில் ஃபார்ஸி சீசன் 2 வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ராஜ் மற்றும் டிகே தற்போது ராக்த் ப்ரம்மாந்த் வெப்தொடரை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ஷாகித் கபூர் நடிப்பில் ‘ப்ளடி டாடி’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
    • இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    பிரபல பாலிவுட் நடிகரான ஷாகித் கபூர், நடிகர் பங்கஜ் கபூர் மற்றும் நீலிமா அசீமின் மகனாவார். முதலில் படங்களில் பின்னணி நடன கலைஞராக பணியாற்றிய ஷாகித் கபூர் அதன்பின்னர், கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான 'இஷ்க் விஷ்க்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.


    2013-ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடித்த 'ஆர். ராஜ்குமார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது 2015-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'தூங்காவனம்'திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட 'ப்ளடி டாடி' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் இன்று (ஜூன் 9) ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.

    இந்நிலையில், நடிகர் ஷாகித் கபூர் தென்னிந்திய மக்கள் இந்தி திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "தென்னிந்திய மக்கள் இந்தி திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பாலிவுட் ரசிகர்கள் பெரிய மனம் படைத்தவர்கள். அவர்கள் எப்படி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களை ரசிக்கிறார்களோ அதேபோல் தென்னிந்தியர்களும் ரசிக்க வேண்டும்" என்று கூறினார்.

    • ஷாஹித் கபூர் 2015-ல் மீரா ராஜ்புத்தை என்பவரை மணந்தார். 
    • நான் எப்போதும் எனது அழகான மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன்.

    பிரபல இந்தி நடிகர் ஷாஹித் கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியது குறித்து மனம் திறந்து பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் எப்போதும் எனது அழகான மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன். இதுவே அப்பழக்கத்தை நான் கைவிட முக்கிய காரணமாக இருந்தது.


    ஒருமுறை மகளுக்கு தெரியாமல் புகைபிடிக்கும் போது எவ்வளவுநாள் இப்படியே இருப்போம். இனி வாழ்க்கையில் சிகரெட்டை தொடவே கூடாது என முடிவு செய்தேன். இனி மகளிடம் இருந்து மறைக்க விரும்பாததால் அந்த புகைப்பழக்கத்தை கைவிட்டு விட்டேன் என்று ஷாஹித் கபூர் கூறினார்.


    ஷாஹித் கபூர் 2015-ல் மீரா ராஜ்புத்தை என்பவரை மணந்தார். இவர்களுக்கு மிஷா (வயது7), ஜைன்(வயது4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷாஹித் கபூர் நடிக்கும் புதிய பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
    • புதிய படத்தை சச்சின் ரவி இயக்கி உள்ளார்.

    தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள பான்-இந்தியா படைப்பாக உருவாகி இருக்கும் படம் 'அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்'. இந்த படம், மகாபாரதத்தில் வரும் அஸ்வத்தாமனின் கதையை ஆராய்கிறது.

    தற்போதைய காலகட்டத்தில் அஸ்வத்தாமன் நவீன சவால்களையும் வலிமைமிக்க எதிரிகளையும் எதிர்கொள்கிறார். இதை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை அதிரடி காட்சிகள் மற்றும் திருப்பங்களுடன் சொல்லும் படம் இது.

     


    படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கடந்த காலமும் நிகழ் காலமும் மோதும் பிரம்மாண்ட களத்தை கண் முன்னே கொண்டு வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இப்படம் அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

    பூஜா என்டர்டெயின்மென்ட் பேனரில் வாசு பாக்னானி, ஜக்கி பாக்னானி மற்றும் தீப்ஷிகா தேஷ்முக் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். சச்சின் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் 'அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்', உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாகித் கபூருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பதாக செய்தி வெளியாகிய நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். #ShahidKapoor #StomachCancer
    இந்தி திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் ஷாகித் கபூர். இவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. இதனால் அவரின் ரசிகர்கள் கவலைக்குள்ளாகினர்.

    இந்த நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஷாகித் கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் “தான் முழு உடல்நலத்துடன் இருப்பதாகவும், இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்” என்றும் கூறியுள்ளார்.


    நடிகர் ஷாகித் கபூர் தற்போது தெலுங்கில் வெற்றிபெற்ற `அர்ஜூன் ரெட்டி' படத்தின் இந்தி ரீமேக்கான “காபிர் சிங்” படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #ShahidKapoor #StomachCancer

    ×