என் மலர்
சினிமா செய்திகள்

ஓ ரோமியோ: திஷா பதானி கவர்ச்சி நடனத்தில் வைரலாகும் வீடியோ பாடல்
இந்தியில் முன்னணி இயக்குநர் விஷால் பரத்வாஜ். ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி இவர் எடுத்த படங்கள் பிரசித்தம். ஓம்காரா(ஒதெல்லோ நாடகம்), மகபூல் (மாக்பெத் நாடகம்), ஹைதர்(ஹாம்லெட் நாடகம்) ஆகிய படங்கள் கிளாசிக் ரகம்.
இவர் தற்போது ஓ' ரோமியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது ரோமியோ ஜூலியட் நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹைதர் படத்தில் நடித்த ஷாஹித் கபூர் மீண்டும் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக திரிப்தி திம்ரி நடித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் நானா படேகர், பரிதா ஜலால் , அவினாஷ் திவாரி, விக்ராந்த் மாஸ்ஸி, திஷா பதானி மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இதன் டிரெய்லர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற கவர்ச்சி பாடலின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஷாஹித் கபூர் உடன் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடனமாடியுள்ளார். இந்த வீடியோ பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
இப்படம் பிப்ரவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






