search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகைப்பழக்கம்"

    • ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.

    நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் என்பது நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த அழுத்தம் இயல்பை விட அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும்.

    நுரையீரலில் உள்ள ரத்தக்குழாய்கள் தடிமனாகி, அடைப்பு ஏற்பட்டு, அதன் பாதை குறுகுவதால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

    நுரையீரலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாகும்:-


    இதய வால்வுகளின் (தடுக்கிதழ்) குறைபாடுகள், இடது பக்க ஏட்ரியம் மற்றும் வெண்ட்டிரிக்கிள் சார்ந்த இதய நோய்கள், காரணம் அறியப்படாமல் ஏற்படும் தான்தோன்றி நோய்கள் (முதல் நிலை நுரையீரல் ரத்த அழுத்தம்), மரபணு காரணங்கள், இதய செயலிழப்பு, பிறவி இதய குறைபாடுகள், நாள்பட்ட திரோம்போஎம்போலிக் நுரையீரல் உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி),

    தொற்று பாதிப்புகள் (ஹெச்.ஐ.வி), மருந்துகளின் பக்க விளைவுகள் (பசியை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ஆம்பெடமைன்கள்), நுரையீரலில் ரத்த கட்டிகள் ஏற்பட்டு குருதியோட்டத்தை தடுக்கும் தக்கையடைப்பு நோய், கல்லீரலில் ஏற்படும் சிரோசிஸ் போன்ற பிரச்சனைகள், ஆட்டோ இம்யூன் நோய்கள் (தன்னுடல் தாக்குநோய்), உடல் பருமன், புகைப்பிடித்தல் பழக்கம், சர்க்கரை நோய்.


    ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிந்து மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகளை உட்கொள்தல் அவசியம். இது பலன் தராவிட்டால், ஏட்ரியல் செப்டோஸ்டமி, நுரையீரல் மாற்று அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.

    நுரையீரல் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், உயரமான இடங்களைத் தவிர்த்தல், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல், புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.

    • 20 சிகரெட்டுகளை புகைப்பதால் கிட்டத்தட்ட வாழ்நாளில் ஏழு மணிநேரத்தை மனிதன் பறிகொடுக்கிறான்
    • புத்தாண்டில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதிவரை புகைபிடிக்காமல் இருந்தாலே தங்கள் வாழ்நாளில் ஒரு வாரத்தை இழக்காமல் தஇருக்கலாம் எ

     இங்கிலாந்து அரசின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை மேற்பார்வையில் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. அதில், புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 20 நிமிடங்களை இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

    சராசரியாக ஒரு பாக்கெட்டில் உள்ள 20 சிகரெட்டுகளை புகைப்பதால் கிட்டத்தட்ட வாழ்நாளில் ஏழு மணிநேரத்தை மனிதன் பறிகொடுக்கிறான் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்கள் ஒவ்வொரு சிகரெட்டிலும் தங்கள் வாழ்நாளில் 17 நிமிடங்களை இழக்கிறார்கள், பெண்கள் 22 நிமிடங்களை இழக்கிறார்கள்.

     

    நீண்ட கால புகைப்பழக்கம் உடையவர்கள் , தங்கள் வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழக்கிறார்கள் என்றும் புகைபிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பதை மக்கள் பொதுவாக அறிந்திருக்கிறார்கள், ஆனால் அதை எவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்று UCL இன் ஆல்கஹால் மற்றும் புகையிலை ஆராய்ச்சி குழுவின் முதன்மை ஆராய்ச்சியாளரான டாக்டர் சாரா ஜாக்சன் கூறுகிறார்.

    புகைப்பிடிப்பவர்கள், வரும் புத்தாண்டில் இருந்து பிப்ரவரி 20 ஆம் தேதிவரை புகைபிடிக்காமல் இருந்தாலே தங்கள் வாழ்நாளில் ஒரு வாரத்தை இழக்காமல் இருக்கலாம் என்றும் ஆண்டின் இறுதிவரை புகைபிடிக்காமல் இருந்தால் 50 நாட்கள் வாழ்க்கையை இழப்பதைத் தவிர்க்கலாம் என்றும் இங்கிலாந்து சுகாதாரத் துறை இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி 2025 இல் தங்கள் நாட்டு மக்களை சிகரெட்டை நிறுத்த வலியுறுத்தி உள்ளது.

     

    நீண்ட கால சிகரெட் புகைப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வரை இறக்கின்றனர். இது, இங்கிலாந்தில் ஆண்டுக்கு 80,000 இறப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் புற்றுநோய் இறப்புகளில் கால் வாசி சிகரெட் பழக்கத்தால் தான் ஏற்படுகிறது. 

     

    • எனது 15 வயதில் நண்பர்களை பார்த்து புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். அதனால் எந்த ஆபத்தும் இருக்காது என்று கருதினேன்.
    • ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார்.

    அதிகமாக சிகெரெட் பிடித்ததால் 17 வயது இளம்பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் ஒரு வாரத்துக்கு சாராசரியாக 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார் அதாவது ஒரு வாரத்துக்கு சற்றேறக்குறைய 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார்.

     

    இந்நிலையில் கடந்த மே 11 ஆம் தேதி  தனது தோழியின் வீட்டில் இருந்தபோது கைலா, திடீரென வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியால் அலறித் துடித்து மயங்கி விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் கைலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அளவுக்கு அதிகமான முறை சிகெரெட் புகையை உள்ளிழுத்ததால் நுரையீரலில் ஓட்டை விழுந்துள்ளதாக தெரிவித்தனர்.

    பல்மோனரி பிலெப் எனப்படும் இந்த நுரையீரல் ஓட்டை விரிவடையாமல் இருக்க ஐந்தரை மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கினர். இதனால் கைலா உயிர்பிழைத்தார்.

     இதுகுறித்து கைலாவின் தந்தை கூறுகையில், 'எனது மகள் படும் வேதனையை பார்த்து நான் ஒரு குழந்தையைப் போல் அழுதேன். அவளுக்கு மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமாக சென்றது. அவள் இறக்கப்போகிறாள் என்றே பயந்தேன், தயவு செய்து இளஞர்கள் புகைப்பழக்கத்தை கை விடுங்கள், அதனால் ஒரு பயனும் இல்லை, Its not worth it' என்று தெரிவித்தார்.

     

    சிகிச்சைக்ககுப் பிறகு உடல் தேறி வரும் கைலா பேசுகையில், 'எனது 15 வயதில் நண்பர்களை பார்த்து புகைபிடிக்க கற்றுக்கொண்டேன். அதனால் எந்த ஆபத்தும் இருக்காது என்று கருதினேன். ஆனால் இப்போது நன் அனுபவித்த வலிக்கு பிறகு நீ ஒருபோதும் சிகரெட்டை தொடப்போவதில்லை' என கூறினார். 

     

    சிகெரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிகெரெட் புகையை உள்ளிழுக்கும்போது நுரையீரலுக்குள் நச்சுத்தன்மை கொண்ட கேமிக்கல்களும்,  யுரேனியமும் படிமங்களாக சேகரமாகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    • சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள்.
    • இதய செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் வித்திடும்.

    சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையை உள்ளிழுத்த பிறகு, இதய அமைப்பு உடனடியாக சில மாற்றங்களுக்கு உட்படுகிறது. இதய துடிப்பில் வேறுபாடு, ரத்த அழுத்தம் சீரற்றத்தன்மை, தமனி சுருக்கம் என இதய செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிகரெட் புகைத்த பிறகு உடலில் ஏற்படும் அத்தகைய மாற்றங்கள் குறித்து பார்ப்போம்.

    இதயத் துடிப்பு

    புகையிலையில் இருக்கும் முதன்மையான போதைப்பொருளான நிகோடின், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் ஹார்மோனான அட்ரினலின் செயல்பாட்டை தூண்டுவிடும். அதனால் புகைபிடித்த சில நொடிகளுக்குள் இதயத்துடிப்பு உடனடியாக அதிகரிக்க தொடங்கிவிடும்.

    ரத்த அழுத்தம்

    நிகோடின் ரத்த நாளங்களை சுருங்கச் செய்யக்கூடியது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் செய்யும். இதனால் இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

    ஆக்சிஜன் குறையும்

    சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களின் புகையில் கார்பன் மோனாக்சைடு உள்ளது. இது ரத்த ஓட்டத்தில் குறுக்கிட்டு அதில் கடத்தப்படும் ஆக்சிஜன் அளவை குறைக்கும். இதய தசை உள்பட செல்களுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை குறைப்பதற்கும் வழிவகுத்துவிடும்.

    ரத்த உறைவு

    புகைபிடிக்கும் பழக்கத்தை தொடரும்போது தமனிகளில் அடைப்பு உருவாவதை ஊக்குவிக்கும். இதனால் ரத்த உறைவு பிரச்சினை ஏற்படும். இதயம் அல்லது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும். அதன் காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடும்.

    இதய செயலிழப்பு

    புகைப்பழக்கத்தை இடைவிடாமல் தொடர்ந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்தத்தின் தேவையை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம். ரத்த விநியோகத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதற்கும் வழிவகுக்கலாம். இந்த ஏற்றத்தாழ்வுகள் மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பாதிப்புகளுக்கும் வித்திடும்.

    • ஷாஹித் கபூர் 2015-ல் மீரா ராஜ்புத்தை என்பவரை மணந்தார். 
    • நான் எப்போதும் எனது அழகான மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன்.

    பிரபல இந்தி நடிகர் ஷாஹித் கபூர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியது குறித்து மனம் திறந்து பேசினார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் எப்போதும் எனது அழகான மகளுக்கு தெரியாமல் மறைந்திருந்தே புகைப்பிடிப்பேன். இதுவே அப்பழக்கத்தை நான் கைவிட முக்கிய காரணமாக இருந்தது.


    ஒருமுறை மகளுக்கு தெரியாமல் புகைபிடிக்கும் போது எவ்வளவுநாள் இப்படியே இருப்போம். இனி வாழ்க்கையில் சிகரெட்டை தொடவே கூடாது என முடிவு செய்தேன். இனி மகளிடம் இருந்து மறைக்க விரும்பாததால் அந்த புகைப்பழக்கத்தை கைவிட்டு விட்டேன் என்று ஷாஹித் கபூர் கூறினார்.


    ஷாஹித் கபூர் 2015-ல் மீரா ராஜ்புத்தை என்பவரை மணந்தார். இவர்களுக்கு மிஷா (வயது7), ஜைன்(வயது4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
    • சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    பொது இடங்களில் புகைப்பிடித்தலோ, புகை–யிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்ட–னைக்குரிய குற்றமாகும். அரசு அலுவலர்களின் ஆய்வின்போது கண்டறியப் பட்டாலோ, உறுதி செய்யப் பட்டலோ உடனடி அபரா–தமாக முதன்முறையாக ரூ.100, மீண்டும் அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக் கப்படும்.

    மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழப்புணர்வை சுகாதார துறையினர் ஏற்ப–டுத்துவதில்லை.

    புகைப்பவரை காட்டிலும் அவரின் அருகில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளா–வதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், காச–நோய், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு காரணியாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட் டினால் உயிரிழக்கின்றனர்.

    பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு சார்பில் கண்டிப் பான நடவடிக்கை–கள் எடுக்க வேண்டும். அப்போது தான் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் பொதுமக்க–ளிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை திரையரங்கு–கள், பஸ்களில் உள்புறமாக புகைபிடிப்பது சாதாரண விஷயமாக இருந்தது.

    ராமநாதபுரம் மாவட் டத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க போலீசார் உதவியு–டன் சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கண்டிப் பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புற்றுநோய்க்கு முக்கிய காரணமாக புகையிலையை ஒழிக்கும் விதமாக இன்று புகையிலை எதிர்ப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. #NoTobacco #WorldNoTobaccoDay
    புதுடெல்லி:

    உலகின் மிகக்கொடிய நோயான புற்றுநோய் ஏற்படுவதற்கு மூலக்கராணமாக கருதப்படுவது புகையிலை. இதனால் உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

    உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.


    ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு கருதுகோளை அடிப்படையாக கொண்டு இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு புகையிலையானது இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருதுகோளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.


    புகையிலை பாதிப்புகள் குறித்து பேசிய பேராசிரியர் ஆர்.என். ஷரன், எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் பிடிப்பதனால் கேன்சர் பாதிப்பு 90-92 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. புகையிலையை எரிக்கும் போது வரும் புகையினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இ-சிகரெட்டில் இருந்து வரும் புகையின் பாதிப்பு மிகவும் குறைவு என கூறினார்.

    இதற்கிடையில், ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் புகையிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். #NoTobacco #WorldNoTobaccoDay
    ×