நுரையீரலில் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?

ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.
நுரையீரலில் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?
Published on

நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் என்பது நுரையீரலில் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்த அழுத்தம் இயல்பை விட அதிகமாக இருக்கும் ஒரு நிலையாகும்.

நுரையீரலில் உள்ள ரத்தக்குழாய்கள் தடிமனாகி, அடைப்பு ஏற்பட்டு, அதன் பாதை குறுகுவதால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நுரையீரலில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு கீழ்க்கண்டவை முக்கிய காரணங்களாகும்:-

இதய வால்வுகளின் (தடுக்கிதழ்) குறைபாடுகள், இடது பக்க ஏட்ரியம் மற்றும் வெண்ட்டிரிக்கிள் சார்ந்த இதய நோய்கள், காரணம் அறியப்படாமல் ஏற்படும் தான்தோன்றி நோய்கள் (முதல் நிலை நுரையீரல் ரத்த அழுத்தம்), மரபணு காரணங்கள், இதய செயலிழப்பு, பிறவி இதய குறைபாடுகள், நாள்பட்ட திரோம்போஎம்போலிக் நுரையீரல் உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (சி.ஓ.பி.டி),

தொற்று பாதிப்புகள் (ஹெச்.ஐ.வி), மருந்துகளின் பக்க விளைவுகள் (பசியை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ஆம்பெடமைன்கள்), நுரையீரலில் ரத்த கட்டிகள் ஏற்பட்டு குருதியோட்டத்தை தடுக்கும் தக்கையடைப்பு நோய், கல்லீரலில் ஏற்படும் சிரோசிஸ் போன்ற பிரச்சனைகள், ஆட்டோ இம்யூன் நோய்கள் (தன்னுடல் தாக்குநோய்), உடல் பருமன், புகைப்பிடித்தல் பழக்கம், சர்க்கரை நோய்.

ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிந்து மருத்துவரை கலந்தாலோசித்து மருந்துகளை உட்கொள்தல் அவசியம். இது பலன் தராவிட்டால், ஏட்ரியல் செப்டோஸ்டமி, நுரையீரல் மாற்று அறுவை மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகுந்த பலன் அளிக்கும்.

நுரையீரல் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்தல், தினமும் உடற்பயிற்சி செய்தல், உயரமான இடங்களைத் தவிர்த்தல், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்தல், புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com