கும்கி 2 படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி

கும்கி படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கும்கி 2 படத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் விஜய் சேதுபதி
Published on

பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

தொடர்ந்து, பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.

'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கும்கி 2 படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கும்கி 2 படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. விஜய் சேதுபதி டீசருடன், வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில்,"ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான நட்பு மற்றும் பிணைப்பைப் பற்றிய அழகான கதை. முழு குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com