என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actress malvi malhotra"

    • ஒரு திகில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
    • தமன், மனைவி மால்வி மல்ஹோத்ராவுடன் வாழ்ந்து வருகிறார்.

    கதைக்களம்

    தமன், மனைவி மால்வி மல்ஹோத்ராவுடன் வாழ்ந்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் மால்விக்கு அடிக்கடி கெட்ட கனவுகளும், சில உருவங்களும் கனவில் வந்து போகிறது.

    மறுபக்கம் அரசியல்வாதியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் காளி வெங்கட். இவரது மகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இதற்காக காளி வெங்கட் அந்த அரசியல்வாதியிடம் பணம் கேட்க அவர் அதை தர மறுக்கிறார் மேலும் இதனால் இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

    அப்போது தேர்தலுக்காக வைத்திருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து யாருக்கும் தெரியாமல் காளி வெங்கட் ஒரு தொழிற்சாலையில் பதுக்கி வைக்கிறார். காளி வெங்கடை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.

    பணம் இருக்கும் தகவலை தமன் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து விட்டு இறந்து போகிறார்.

    பணத்தை எடுப்பதற்காக தமன், மனைவி மால்வி மற்றும் நண்பர்கள் அந்த இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு மால்வி தன் கனவில் பார்த்த பயங்கரமான உருவங்களை பார்க்கிறார். பணத்தை தேடும் நண்பர்கள் ஆபத்தில் சிக்குகிறார்கள்.

    நண்பர்களை தமன் காப்பாற்றினாரா?, அவரது மனைவியின் கனவுக்கும், அந்த இடத்திற்கும் என்ன தொடர்பு? காளி வெங்கட்டின் மகளின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் தமன், திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    மனைவியாக நடித்திருக்கும் மால்வி மல்ஹோத்ரா கனவுகளால் பயந்தபடியே நடித்து கவர்ந்து இருக்கிறார். நண்பராக நடித்திருக்கும் மைத்ரேயா மற்றும் அவரது காதலியாக நடித்திருக்கும் ரக்ஷா ஷெரின், சிவம், அருண் கார்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை நிறைவாக செய்து இருக்கிறார்கள்.

    காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, முனீஷ்காந்த் ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.

    இயக்கம்

    கற்பனையான கதையை நிஜத்தில் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் மணிவர்மன். சாத்தானை கடவுளாக நம்பும் கூட்டமும், அவர்களின் நம்பிக்கையும் நிஜமானால் எப்படி இருக்கும்? என்ற கோணத்தில் திரைக்கதையாக நகர்த்தி இருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் கே.ஜி, திகிலான காட்சிகளை மிரட்டும் அளவிற்கு படமாக்கி இருக்கிறார்.

    இசை

    இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கத்தின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

    தயாரிப்பு

    Amoham Studios, Whitelamp Pictures தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது

    • ராஜ்தருணுடன் 11 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தேன் என லாவண்யா கூறினார்.
    • இப்போது நடிகை மால்வி மல்கோத்ராவுடன் தொடர்பு ஏற்பட்டு அவரோடு சுற்றுகிறார் எனவும் கூறினார்.

    தெலுங்கு நடிகரான ராஜ் தருண் 2013-ம் ஆண்டு வெளியான உய்யால ஜம்பாலா படம் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார்.இவர் மீது லாவண்யா என்ற பெண் போலீசில் புகார் அளித்தார். புகார் மனுவில், "ராஜ்தருணுடன் 11 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தேன். இதனால் கர்ப்பமான என்னை கருக்கலைப்பு செய்ய நிர்ப்பந்தித்தார். இப்போது நடிகை மால்வி மல்கோத்ராவுடன் தொடர்பு ஏற்பட்டு அவரோடு சுற்றுகிறார். என்னை துன்புறுத்துகிறார்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ராஜ்தருண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது நகைகளை திருடி விட்டதாக மால்வி மல்கோத்ரா மீது லாவண்யா போலீசில் இன்னொரு புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், "எனக்கு சொந்தமான தங்க வளையல்கள், தாலி சரடு, பிரேஸ்லெட், செயின் போன்ற நகைகளை ராஜ் தருணுடன் இணைந்து மால்வி மல்கோத்ரா திருடிச் சென்று விட்டார். இவற்றின் மதிப்பு ரூ.11 லட்சம். எங்கள் வீட்டுக்கு மூன்று முறை அவர் வந்துள்ளார். நகைகள் வைத்திருந்த பீரோ சாவி அவரிடம்தான் இருக்கிறது'' என்று கூறியுள்ளார். இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×