search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lavanya"

    • கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

    தெலுங்கானா மாநிலம், சைபராபாத் அடுத்த கோகா பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லாவண்யா என்கிற அன்விதா ( வயது 33). இவர் தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் லாவண்யா கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக மடப்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் லாவண்யாவை கண்காணித்து வந்தனர். அப்போது லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் நர்சிங் போலீசார் இணைந்து லாவண்யாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த எம்.டி.எம்.ஏ எனப்படும் 4 கிராம் எடையுள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அதே குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் ஒருவருடன் லாவண்யாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. அந்த நடிகருக்காக லாவண்யா கோவாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. லாவண்யாவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த ஒருவர் அவரது காதலியுடன் தலைமறைவாகி உள்ளார். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

    • அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா வலியுறுத்தல்
    • மக்கள் 60 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதுதான்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வடக்கு மாநில அ.ம.மு.க. செயலாளர் எஸ்.டி.சேகர் அனுமதியுடன் இணைச் செயலாளர் லாவண்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக கடந்த 2 நாட்க ளாக விடாது தொடர்ந்து பெய்து வருகின்றது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கவர்னரும், அரசும் கேட்டுக் கொண்டுள்ளது.

    அதேசமயம் அரசு சார்பில் 211 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் வந்து தங்கும் மக்கள் 60 ஆயிரம் பேருக்கு உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது வரவேற்கக் கூடியதுதான். அதேசமயம் நிவாரண முகாம்களும் எங்கெங்கு உள்ளது என்ற விவரம் மக்களுக்கு தெரியவில்லை. எனவே அனைத்து அங்கன்வாடி மையங்க ளிலும் நிவாரண முகாம் களின் முகவரியை நோட்டீ சாக ஒட்ட வேண்டும்.

    மேலும் வயதான முதி யோர் பலர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள் அங்கன்வாடி ஊழியர்க ளுக்குத்தான் தெரியும்.

    எனவே 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வசிக்கும் அனைவரின் இல்லங்களுக்கும் அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் நேரில் சென்று அவர்களின் நலன் மற்றும் தேவை குறித்து அறிந்து மருந்துகளும், உணவும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • அ.ம.மு.க. மாநில இணைச்செயலாளர் லாவண்யா வழங்கினார்
    • பொதுமக்களுக்கு வேட்டி-சேலை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில அ.ம.மு.க. மாநில இணைச் செயலாளர் லாவண்யாவின் மகன் சரண்ராஜ் 5-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி ரெட்டியார் பாளையம் ஜெயா நகரில் நடைபெற்றது.

    இதனையொட்டி ரெட்டியார் பாளையத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயா நகரில் உள்ள இல்லத்தில் சரண்ராஜ் உருவ படத்திற்கு அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு வேட்டி-சேலை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    பின்னர் உப்பளத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து வரும் சிறுவர், சிறுமிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் அ.ம.மு.க. தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர், இணைச் செயலாளர் லாவண்யா உள்ளிட்ட பலர் பங்கேற்று மதிய உணவு வழங்கினர்.

    இதில் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் சீத்தாராமன், நிர்வாகிகள் ரகுபதி, ராமச்சந்திரன், சிவக்குமார், கலியமூர்த்தி, தினேஷ், வைத்தியநாதன், உழவர்கரை தொகுதி நிர்வாகிகள் மேல் அமைப்பு பிரதிநிதி லூர்துசாமி, தொகுதி துணைச் செயலாளர் ழில்பேர், சுப்பிரமணி, கில்பர்ட், மோகன்குமார், சபா, சுப்பு, அருண், சூரியா, கவுதம், மணிகண்டன், பாரதிராஜா, சுப்பிரமணி, சூசைராணி, ஜாக்குலின்மேரி, உமா, ரோசலின், கவிதா, எலன் செல்வராணி, இந்துமதி, இன்பம், சந்திரா, சரளா, உமா, திவ்யா, முத்துலட்சுமி, மாலா, மாலதி, சாந்தி, புனிதா, இலக்கியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×