நடிகருக்காக போதை பொருள் கடத்திய துணை நடிகை.. போலீசார் அதிரடி

கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.
நடிகருக்காக போதை பொருள் கடத்திய துணை நடிகை.. போலீசார் அதிரடி
Published on

தெலுங்கானா மாநிலம், சைபராபாத் அடுத்த கோகா பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் லாவண்யா என்கிற அன்விதா ( வயது 33). இவர் தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் லாவண்யா கோவாவில் இருந்து போதைப் பொருள் கடத்தி வருவதாக மடப்பூர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் லாவண்யாவை கண்காணித்து வந்தனர். அப்போது லாவண்யா போதை பொருள் கடத்தி வந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் நர்சிங் போலீசார் இணைந்து லாவண்யாவின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து விலை உயர்ந்த எம்.டி.எம்.ஏ எனப்படும் 4 கிராம் எடையுள்ள போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். லாவண்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

அதே குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் ஒருவருடன் லாவண்யாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. அந்த நடிகருக்காக லாவண்யா கோவாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. லாவண்யாவுக்கு போதைப் பொருள் சப்ளை செய்த ஒருவர் அவரது காதலியுடன் தலைமறைவாகி உள்ளார். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com