என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்தியாவில் எங்கும் தெரிவது சனாதன தர்மம் - அகண்டா 2 தமிழ்  டிரெய்லர்!
    X

    "இந்தியாவில் எங்கும் தெரிவது சனாதன தர்மம்" - அகண்டா 2 தமிழ் டிரெய்லர்!

    • இந்த உலகத்துல எந்த நாட்டுக்கு போனாலு உங்க கண்ணுக்கு தெரியிறது ‘ஒரு மதம்’.
    • தெய்வத்தோட தலையிட்ட நாங்க தண்டிப்போம்

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் டிச.5-ல் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

    டிரெய்லரில், "இந்த உலகத்துல எந்த நாட்டுக்கு போனாலு உங்க கண்ணுக்கு தெரியிறது 'ஒரு மதம்'. இந்த நாட்டுல எங்க பாத்தாலும் உங்க கண்ணுக்கு தெரியிறது ஒரு தர்மம், 'சனாதன இந்து தர்மம்'. தேசத்தோட தலையிட்டா நீங்க கண்டிப்பீங்க, தெய்வத்தோட தலையிட்ட நாங்க தண்டிப்போம்" போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது வெளிநாட்டினரால் சனாதன தர்மத்திற்கு வரும் ஆபத்தை தடுக்கிறார் பாலகிருஷ்ணா. இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×