என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரி அர்ஜுனன்"

    “போடா போடி” படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரிப்பில், இயக்குநர் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள "ஃபோர்த் ஃப்ளோர்" திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் சுந்தரபாண்டி. சைக்காலஜிகள் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது. 

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார், தீப்ஷிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    "போடா போடி" படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். போடா போடி, வெண்ணிலா கபடி குழு படங்களின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அநீதி, ஜெயில் மற்றும் மத்தகம் வெப் சீரிஸிற்கு கலை இயக்கம் செய்த சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்கிறார்.

    இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து, விரைவில் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறன்றனர். இப்படம் வரும் பிப்ரவரி மாத இறுதியில் திரைக்கு வருகிறது.

    • விஜய் மில்டன் அடுத்ததாக தெலுங்கு நடிகரான ராஜ் தருண் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படத்தை இயக்குகிறார்.
    • பால் டப்பா இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

     விஜய் மில்டன் அடுத்ததாக தெலுங்கு நடிகரான ராஜ் தருண் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படத்தை இயக்குகிறார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார்.அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பால் டப்பா  இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

    தற்பொழுது நடிகர் ஆரி அர்ஜுனன் இப்படத்தில் நடித்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. ஆரி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். ஆரி முதன்முதலில் காவல் அதிகாரியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக ஜர்னி என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். திரைப்படத்தின் டைட்டில் லுக் வரும் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது.

    • இயக்குனர் காகா எழுதி, இயக்கியிருக்கும் குறும்படம் வார் ஆன் டிரக்ஸ்.
    • இந்த குறும்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் குறும்படம் 'வார் ஆன் டிரக்ஸ்' ( War On Drugs) . இயக்குனர் கே.வி.ஆனந்தின் முன்னாள் இணை இயக்குனரான காகா எழுதி, இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை ஆர்.கே.ஜி குரூப்பின் ஜி.சந்தோஷ் குமார் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு கேபி இசையமைக்க, ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    வார் ஆன் டிரக்ஸ்

    போதைப்பொருள் பழக்கம் நம் இளைய சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து கொண்டிருக்கிறது. போதைப்பழக்கத்தில் சிக்கிக்கொள்வோரை மீட்க அரசும் காவல்துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக போதைப்பொருள் பயன்பாட்டின் கெடுதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த குறும்படம் உருவாகியுள்ளது.

    இந்த குறும்படத்தினை வேலூர் காவல்துறை டிஐஜி ஆனி விஜயா. ஐபிஎஸ் கே.எஸ். பாலகிருஷ்ணன், பிவிஎஸ்சி மற்றும் ஆர்கேஜி இன்ஃபோடெயின்மெண்ட் இணைந்து வெளியிட்டனர். 

    ×