ராம் சரண் நடிக்கும் "பெத்தி" புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

பெத்தி படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
ராம் சரண் நடிக்கும் "பெத்தி" புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

ராம் சரண்- இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு இயக்கத்தில் 'பெத்தி' படத்தில் ராம் சரண் நடித்து வருகிறார். இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சிகிரி பாடலின் லிரிக்கள் வீடியோ உள்பட பாடல்கள் வெளியானது.

இந்நிலையில், 'பெத்தி' திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com