என் மலர்
சினிமா செய்திகள்

தியேட்டரில் உட்கார்ந்த இடத்திலேயே உணவு: புதிய அனுபவத்தை கொடுக்கும் PVR Inox-ன் dine-in cinema
- பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.
- உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
சென்னை, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது.
பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையால் வரும் வருமானத்தை போல உணவுப்பொருட்கள், குளிர்பானங்களின் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.
2022 ஆம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்கில் விற்பனை செய்த உணவுப்பொருட்கள், குளிர்பானங்களிலிருந்து 1,618 கோடி வருவாய் ஈட்டியது. அதுவே 2023 ஆம் ஆண்டில் ரூ.1,958.4 கோடி வருவாயாக அதிகரித்தது.
இந்நிலையில், உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
அதன்படி பெங்களூரில் உள்ள M5 ECity பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் இருக்கையிலேயே டைனிங் டேபிள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் படம் பார்க்க வரும் பொதுமக்கள் உணவு வாங்க வெளியே வராமல் அமரும் இடத்திலே உணவு கிடைக்கும் என்று பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாம் கேட்கும் உணவுகளை உடனே சமைத்துத் தரும் 'லைவ் கிச்சன்' அமைப்பையும் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் டைனிங் டேபிளில் LED விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இருட்டில் அமர்ந்து சாப்பிடாமல் வெளிச்சத்தில் சாப்பிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






