என் மலர்
நீங்கள் தேடியது "திரையரங்கம்"
- பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.
- உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
சென்னை, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது.
பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையால் வரும் வருமானத்தை போல உணவுப்பொருட்கள், குளிர்பானங்களின் விற்பனை மூலம் நிறைய வருமானம் கிடைக்கிறது.
2022 ஆம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்கில் விற்பனை செய்த உணவுப்பொருட்கள், குளிர்பானங்களிலிருந்து 1,618 கோடி வருவாய் ஈட்டியது. அதுவே 2023 ஆம் ஆண்டில் ரூ.1,958.4 கோடி வருவாயாக அதிகரித்தது.
இந்நிலையில், உணவுப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க பி.வி.ஆர் ஐநாக்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.
அதன்படி பெங்களூரில் உள்ள M5 ECity பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் இருக்கையிலேயே டைனிங் டேபிள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் படம் பார்க்க வரும் பொதுமக்கள் உணவு வாங்க வெளியே வராமல் அமரும் இடத்திலே உணவு கிடைக்கும் என்று பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாம் கேட்கும் உணவுகளை உடனே சமைத்துத் தரும் 'லைவ் கிச்சன்' அமைப்பையும் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் டைனிங் டேபிளில் LED விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இருட்டில் அமர்ந்து சாப்பிடாமல் வெளிச்சத்தில் சாப்பிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டிக்கெட் கட்டணம் ரூ.200க்கு கட்டுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
- ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பு.
கர்நாடக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை அதிகபட்சமாக ரூ.200 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட ஆணையில்; "அனைத்து மொழிப் படங்களுக்கான, மல்டிபிளக்ஸ் உள்ளிட் அனைத்து விதமான தியேட்டர்களும் பொழுதுபோக்கு வரி உட்பட ரூ.200க்கு மிகாமல் கட்டணத்தை வைக்க வேண்டும். இது குறித்த ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று டிக்கெட் கட்டணம் ரூ.200க்கு கட்டுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை கட்டுக்குள் கொண்டுவர கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இந்த உத்தரவு, பொழுதுபோக்கு வரி உட்பட அனைத்து மொழி படங்களுக்கும், அனைத்து வகை திரையரங்குகளுக்கும் பொருந்தும். இது கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) (திருத்த) விதிகள், 2025 இன் கீழ், கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) சட்டம், 1964 இன் பிரிவு 19-ஐ பயன்படுத்தி உள்துறைத் துறையால் வெளியிடப்பட்டது.
மக்களுக்கு சினிமாவை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதுடன், கன்னட சினிமாவை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- திரையரங்க உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய திரைப்படங்களுக்கு முதல் நான்கு நாட்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான இன்றைய விசாரணையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,ஓடிடி தளங்களில் சினிமா பார்க்கும் பழக்கம் அதிகரித்திருப்பதால் திரையரங்குகள் வெகு காலம் நீடிக்காது என்பதை திரையரங்க உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
- படக்குழு கடந்த 2022ல் "கா" படத்தின் டிரைலரை வெளியிட்டது.
- இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு, பாடல் என இரண்டிலும் அசத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
இவர், 'தரமணி', 'அவள்', 'விஸ்வரூபம் 2', 'வடசென்னை' 'அரண்மனை', 'பிசாசு' போன்ற பல படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார்.
இந்நிலையில், நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா கா என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா காட்டுக்குள் சென்று பறவைகள், விலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் புகைப்படக் கலைஞராக ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு கடந்த 2022ல் "கா" படத்தின் டிரைலரை வெளியிட்டது. இந்நிலையில், 'கா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, 'கா' திரைப்படம் வரும் மார்ச் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- 2022ம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் சினிமா டிக்கெட்டுகள் மூலமாக 2,751.4 கோடி வருவாய்.
- 2023ம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் சினிமா டிக்கெட்டுகள் மூலமாக ₹3,279.9 கோடி வருவாய்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்கில் விற்பனை செய்த உணவுப்பொருட்கள், குளிர்பானங்களிலிருந்து 1,618 கோடி வருவாய் ஈட்டியது.
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் விற்பனை செய்த உணவுப்பொருட்கள், குளிர்பானங்களிலிருந்து மட்டும் ₹1,958.4 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளன. இது கடந்த ஆண்டு பெறப்பட்ட வருவாயை விட இது 21%அதிகம் ஆகும்.
2022 ஆம் ஆண்டு பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்கில் சினிமா டிக்கெட்டுகள் மூலமாக 2,751.4 கோடி வருவாய் வந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு ₹3,279.9 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு வருவாயை விட 19 % அதிகமாகும்.
- அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு.
- நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது.
இதைதொடர்ந்து, நெல்லை மேலப்பாளையத்தில் 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படையும், உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.
- அவரது மனைவி கண்ணீர் விடுவது என இணையத்தில் வீடியோக்கள் உலா வருகின்றன.
அல்லு அர்ஜுன் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் பார்க்க சென்றபோது, தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் [டிசம்பர் 13] அவரை அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜுனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜுன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். நடிகர்கள் ராணா டகுபதி, நாக சைதன்யா, உபேந்திர ராவ், விஜய் தேவரகொண்டா மற்றும் புஷ்பா இயக்குநர் சுகுமார் ஆகியோர் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து பேசி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அல்லு அர்ஜுன் வீட்டுக்கு வந்தவுடன் அவருடைய தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷ் அவரை நோக்கி ஓடிச் செல்வதும், அதன்பின் தன்னுடைய மகனை அல்லு அர்ஜுன் ஆராதழுவி நெகிழ்ச்சி அடைந்தது, அவரது மனைவி கண்ணீர் விடுவது என இணையத்தில் வீடியோக்கள் உலா வருகின்றன.
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா 'நான் ஒன்றும் அழவில்லை' என்று ஆறுதல் கூறி கண் கலங்கியுள்ளார்.

மேலும் தமிழ் இயக்குனரும் நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் 'இதை பார்க்க தான் காத்திருந்தேன்' என அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கியுள்ளார்.
- பான் இந்தியா படமாக Ui படம் உருவாகியுள்ளது
ஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி. & வீனஸ் என்டர்டெய்னர்ஸ் சார்பில் ஜி.மனோகரன் மற்றும் கே.பி. ஸ்ரீகாந்த் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் Ui. இந்தப் படத்தை நடிகர் உபேந்திரா இயக்கி நடித்துள்ளார்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள Ui படம் இன்று [டிசம்பர் 20] தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படம் ஆரம்பித்த உடனே தியேட்டர் திரைகளில் போடப்பட்ட கார்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அதாவது, புத்திசாலிகள் முட்டாள்களை போல் தெரிவார்கள், முட்டாள்கள் தங்களை புத்திசாலிகளை போல் காட்டிக்கொள்வார்கள், நீங்கள் முட்டாளாக இருந்தால் முழு படத்தையும் பாருங்கள், நீங்கள் புத்திசாலியாக இருந்தால் தியேட்டரை விட்டு வெளியேறுங்கள் என்ற வசனம் இடம் பெற்ற கார்டை படம் ஆரம்பிக்கும் போதே இடம்பெறச் செய்துள்ளனர்.
இதை புகைப்படம் எடுத்த ரசிகர்கள் இணையத்தில் அதை பகிர்ந்து கமெண்ட்களை குவித்து வருகின்றனர். சிலர் இதை வரவேற்றுள்ள நிலையில், சிலர் இதை கொஞ்சம் ஓவர் என்றும் புலம்பி வருகின்றனர்.






