என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Teams"

    • 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு.

    கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரில் இருந்த காதலனை தாக்கி விட்டு கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.

    பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கோவை இருகூர் அத்தப்பகவுண்டன்புதூர் ரோட்டில் 25 வயது இளம்பெண் ஒருவரை 3 பேர் தாக்கி காருக்குள் தூக்கிப் போட்டுள்ளனர். பின்னர் அந்த கார் அங்கிருந்து இருகூர் நோக்கிச் சென்றுள்ளது. அந்த காரில் இருந்த பெண் சத்தம் போட்டு அலறி இருக்கிறார்.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த கண்காணிப்பு காமிராக்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளை நிற கார் சம்பவ இடத்தில் இருந்து வேகமாக செல்வதும், காரில் இருந்து பெண் கதறி அழுவதும் பதிவாகி இருந்தது.

    இந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காரில் கடத்தப்பட்ட பெண் யார், அவரை கடத்தியவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை. அந்த காரின் எண்ணை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. இருந்தாலும் போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்துகிறார்கள். குடும்ப பிரச்சினை எதாவது இருந்து காரில் அழைத்து செல்லும் போது சத்தம் போட்டாரா அல்லது காதல் விவகாரத்தில் அந்த பெண் கடத்தப்பட்டாரா, பணிக்கு சென்று திரும்பிய பெண் யாராவது கடத்தப்பட்டார்களா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள். மேலும் அந்த பகுதியில் இளம்பெண் யாரும் மாயமாகி உள்ளனரா என்பது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே காரில் கடத்தப்படும் இளம்பெண் கதறி அழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணகுடியை அடுத்த பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித்(வயது 25). கூலி தொழிலாளி.
    • நேற்று மதியம் அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புதுகாலனி பகுதிக்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித்(வயது 25). கூலி தொழிலாளி.

    வெட்டிக்கொலை

    நேற்று மதியம் அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புதுகாலனி பகுதிக்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில மணிநேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது அஜித்தின் இரு கைகளும் துண்டித்தும், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கொடூரமாக அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.

    இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அஜித்திற்கும், அவரது உறவினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் நண்பர்களுடன் மது குடிக்கும்போது மதுவை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் எழுந்த வாக்குவாதத்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக வள்ளியூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

    • அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு.
    • நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது.

    இதைதொடர்ந்து, நெல்லை மேலப்பாளையத்தில் 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படையும், உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×