திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு- 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை

அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்பு.நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீச்சு- 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை
Published on

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அமரன் திரைப்படத்தில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பாக அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, நெல்லை மேலப்பாளையத்தில் 'அமரன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படையும், உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com