பணகுடி அருகே வாலிபரை கொன்ற கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

பணகுடியை அடுத்த பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித்(வயது 25). கூலி தொழிலாளி. நேற்று மதியம் அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புதுகாலனி பகுதிக்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட அஜித்.
கொலை செய்யப்பட்ட அஜித்.
Published on

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் அஜித்(வயது 25). கூலி தொழிலாளி.

வெட்டிக்கொலை

நேற்று மதியம் அஜித் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புதுகாலனி பகுதிக்கு சென்று மது குடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில மணிநேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது அஜித்தின் இரு கைகளும் துண்டித்தும், தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கொடூரமாக அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.

இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அஜித்திற்கும், அவரது உறவினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே நேரத்தில் நண்பர்களுடன் மது குடிக்கும்போது மதுவை பங்கு வைப்பதில் அவர்களுக்குள் எழுந்த வாக்குவாதத்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வள்ளியூர் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com