என் மலர்tooltip icon

    இந்தியா

    திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200..!- கர்நாடகா அரசாணை வெளியீடு
    X

    திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200..!- கர்நாடகா அரசாணை வெளியீடு

    • டிக்கெட் கட்டணம் ரூ.200க்கு கட்டுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
    • ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பு.

    கர்நாடக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை அதிகபட்சமாக ரூ.200 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

    இது குறித்து வெளியிடப்பட்ட ஆணையில்; "அனைத்து மொழிப் படங்களுக்கான, மல்டிபிளக்ஸ் உள்ளிட் அனைத்து விதமான தியேட்டர்களும் பொழுதுபோக்கு வரி உட்பட ரூ.200க்கு மிகாமல் கட்டணத்தை வைக்க வேண்டும். இது குறித்த ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

    சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று டிக்கெட் கட்டணம் ரூ.200க்கு கட்டுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை கட்டுக்குள் கொண்டுவர கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும் இந்த உத்தரவு, பொழுதுபோக்கு வரி உட்பட அனைத்து மொழி படங்களுக்கும், அனைத்து வகை திரையரங்குகளுக்கும் பொருந்தும். இது கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) (திருத்த) விதிகள், 2025 இன் கீழ், கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) சட்டம், 1964 இன் பிரிவு 19-ஐ பயன்படுத்தி உள்துறைத் துறையால் வெளியிடப்பட்டது.

    மக்களுக்கு சினிமாவை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதுடன், கன்னட சினிமாவை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×