என் மலர்
நீங்கள் தேடியது "iravin nizhal"
- பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இரவின் நிழல்
'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வந்ததை அடுத்து சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் பாராட்டினார்.
இந்நிலையில், பார்த்திபன் தன் அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இதற்காக அவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன், "ஆடி ஆடி ஆடி ஆடி கூழ் ஊற்றி, Cool-ஆய் ஆடி ஆடி நாடி நரம்பெல்லாம் எனர்ஜி நல்லா கூடி கூடி கூடி ரெடி ஆகிறான் ப்ளடி அடுத்தப் படத்திற்கு. எப்டி?" என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆடி
— Radhakrishnan Parthiban (@rparthiepan) August 5, 2022
ஆடி
ஆடி
ஆடி கூழ் ஊற்றி,
Cool-ஆய் ஆடி
ஆடி
நாடி
நரம்பெல்லாம்
எனர்ஜி நல்லா
கூடி
கூடி
கூடி
ரெடி
ஆகிறான்
ப்ளடி
அடுத்தப்
படத்திற்கு.
எப்டி? pic.twitter.com/2dTNZe6U8s
- பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இரவின் நிழல் படத்துக்காக நடிகர் பார்த்திபனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எதிலும் தனிப்பாணி - அதுதான் இரா.பார்த்திபன்; ஒத்த செருப்பு படத்துக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்; இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம். பின்நவீனத்துவ ஒரே ஷார்ட் படத்தின் மூலம், தான் ஒரு டெக்னாலஜி சீனியர் எனக் காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் - பார்த்திபன்
இதனுடன் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.
- பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

பார்த்திபன் - ரஜினி
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பார்த்திபன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். அப்பொழுது ரஜினிகாந்த் இரவின் நிழல் படத்தையும் பார்த்திபனையும் பாராட்டியுள்ளார். அதில், இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும்.. அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும்.. முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும்.. எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்..! என்று வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த சந்திப்பில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகை சகாய பிரகிடா முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். இரவின் நிழல் படத்தில் இவர் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார், இதுகுறித்து அவர் விளக்கமளித்திருந்தது பேசுபொருளானது. அதில், "இந்தக் கதையே தனி ஒருவன் பற்றியதுதான். அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும். இப்போ ஒரு சேரிக்கு போனோமென்றால் நாம் கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். சினிமாவுக்காக ஏமாற்ற முடியாது" என்று பேசியிருந்தார். இவரின் இந்த கருத்து பல சலசலப்பை கிளப்பி இருந்தது.

மேலும், சேரி மக்கள் என்று இங்கு யாரும் தனியாக இல்லை. மனிதர்கள் அனைவருமே கெட்ட வார்த்தை பேசுவார்கள். இதில் சேரி மக்கள் என்று தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், இதற்கு தற்போது நடிகை சகாய பிரிகிடா மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார், அதில் அவர் "இடத்தை பொறுத்து மொழி மாறும் என்பதை தான் கூற வந்தேன்.. அது அனைவரிடமும் தவறாக சென்றுவிட்டது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவை குறிப்பிட்டு பார்த்திபனும் மன்னிப்பு கோரியுள்ளார். அதில், பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே! என்று பார்த்திபன் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.
Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே! https://t.co/NSq3LNaYt7
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 17, 2022
- பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இரவின் நிழல்
இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இரவின் நிழல்
இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள "பெஜாரா" என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள இப்பாடல் காதல் தோல்வியால் இளைஞன் ஒருவன் தன் வலியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாடல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
- பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படம் வருகிற 15-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'இரவின் நிழல்' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பாஸ்கர் ராவ் என்பவர் வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இரவின் நிழல்
ஒளிப்பதிவு சாதனங்களுக்கான 25 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தாமல் பட வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த வணிக நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் கீர்த்தனா ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.
- பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள "பாபஞ் செய்யாதிரு" என்ற லிரிக்கல் வீடியோ பாடலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் நிரஞ்சனா ரமணன் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன் குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Feeling elated to release the Lyrical Video of #PaapamCheiyaathiru from @rparthiepan's #IravinNizhal ✨
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 6, 2022
The World's First Non-Linear Single Shot Movie in the music of @arrahman 🔥
https://t.co/j5dmqUnsfV#IravinNizhalFromJuly15@theVcreations @akiraproductio2 @musiconDhwani
- பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இரவின் நிழல் போஸ்டர்
சமீபத்தில் இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு போஸ்டருன் அறிவித்துள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது
- பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'.
- இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இதில் வரலஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 'அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தனுஷ்
சமீபத்தில் இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'இரவின் நிழல்' படத்தின் புதிய அப்டேட்டை பிரபலம் ஒருவர் வெளியிடுவார் என்றும் அப்பிரபலம் என்ற வார்த்தையிலுள்ள மூன்றெழுத்தும் அவர் நடித்துள்ள படத்தின் மூன்றெழுத்தும் ஒன்றாகும் என்று பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதன்படி, இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்துள்ளது.