என் மலர்

  சினிமா செய்திகள்

  பார்த்திபனை பாராட்டி ரஜினி கைப்பட எழுதிய கடிதம்
  X

  ரஜினி - பார்த்திபன்

  பார்த்திபனை பாராட்டி ரஜினி கைப்பட எழுதிய கடிதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.
  • இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

  இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

  பார்த்திபன் - ரஜினி

  இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பார்த்திபன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்துள்ளார். அப்பொழுது ரஜினிகாந்த் இரவின் நிழல் படத்தையும் பார்த்திபனையும் பாராட்டியுள்ளார். அதில், இரவின் நிழல் படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் முழு படத்தையும் எடுத்து, அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும்.. அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும்.. முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும்.. எனது மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்..! என்று வாழ்த்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த சந்திப்பில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

  Next Story
  ×