ரிலீஸ் தேதி அறிவிப்பு நடுவே சமூக அக்கறையை வெளிப்படுத்திய பார்த்திபன்

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'.இப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
பார்த்திபன்
பார்த்திபன்
Published on

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இரவின் நிழல்

'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இரவின் நிழல்

தொடர்ந்து இப்படம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்திருந்ததையடுத்து படம் வெளியாக தாமதம் ஏற்பட்டதால் மன்னிப்புக் கேட்டு பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், 'இரவின் நிழல்' அடுத்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இரவின் நிழல்

இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அமேசானில் இன்று முதல்'பொன்னியின் செல்வன்'எனவே,வரும் வாரம் வருமாம் 'இரவின் நிழல்'-செய்தி பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம்.

இரவின் நிழல்

இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை! பெருங்கொடை!குடையாக விரியும் அரசின் உதவிகள்,அடுத்த சீசனில் மழைக்கும்முன் இடும் கூடுதல் திட்டமிடலால் மக்கள் நலம் கூடும். மழைசாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம் இந்நாளை!" என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com