என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "censorship"

    • ஜனநாயகன் பொங்கலை ஒட்டி, ஜன.9ஆம் அன்று வெளியாகிறது
    • டிசம்பர் 19 அன்று ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

    ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கலை ஒட்டி, ஜன.9ஆம் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் நேற்றுவரை தணிக்கைக் குழு, படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை.

    கடந்த டிசம்பர் 19 அன்று படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து தணிக்கைக் குழுவினர் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மீண்டும் படம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு UA சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மணிநேரம் 3நிமிடங்கள் ஓடக்கூடிய ஜன நாயகன் திரைப்படத்தில் 10க்கும் மேற்பட்ட சண்டை காட்சிகள் உள்ளதாகவும் விஜயின் படங்களிலேயே அதிக வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக ஜன நாயகன் உள்ளது எனவும் கூறப்படுகிறது. 

    • தணிக்கைச் சான்றிதழ் இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம்
    • அரசியல் உள்நோக்கம் என சிடிஆர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

    ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கலை ஒட்டி, ஜன.9ஆம் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் தற்போதுவரை தணிக்கைக் குழு, படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை.

    கடந்த டிசம்பர் 19 அன்று படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து தணிக்கைக் குழுவினர் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மீண்டும் படம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    இதனால் படக்குழு நீதிமன்றத்தை நாட ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அரசியல் உள்நோக்கத்தோடு படத்திற்கு சான்றிதழ் வழங்கத் தடை ஏற்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

     

    • பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்'
    • ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான பட்டத்தையும் ஷஹானா கோஸ்வாமி பெற்றார்.

    பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் 'சந்தோஷ்' . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது. 'சந்தோஷ்' படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது.

    இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (CBFC) தடை விதித்துள்ளது.

    கதை என்ன?

    வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம், கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது.

    என்ன பிரச்சனை?

    இந்நிலையில் படத்தில் உள்ள கருத்துக்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை வெட்ட தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பேசிய படத்தின் ஹீரோயின் (பெண் போலீஸ் கதாபாத்திரம்) ஷஹானா கோஸ்வாமி. "படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை சென்சார் வழங்கியுள்ளது.

    எங்கள் முழு குழுவும் அதனுடன் உடன்படவில்லை, ஏனென்றால் அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள், எனவே, இந்திய திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை.

    இந்தியாவில் வெளியிட இவ்வளவு வெட்டுக்களும் மாற்றங்களும் தேவைப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். இந்த படத்திற்காக ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றிருந்தார்.

    படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான சந்தியா சூரி, சென்சார் குழுவின் முடிவை ஏமாற்றமளிப்பதாகவும் மனதை உடைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    அவர் கூறியதாவது, "இது எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமான முடிவு, ஏனென்றால் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் இந்திய சினிமாவுக்குப் புதியவை என்றோ அல்லது இதற்கு முன்பு வேறு படங்களில் எழுப்பப்பட்டதில்லை என்றோ நான் நினைக்கவில்லை. சென்சார் வாரியம் வழங்கிய வெட்டுக்களின் பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறினார்.

    அந்தியூர் வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
    அந்தியூர்:

    ஈரோடு வனக்கோட்டத்துக்கு உள்பட்ட அந்தியூர் வனப்பகுதியில் முதல் முறையாக புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு பயிற்சி அளிக்கும் முகாம் அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    அப்போது ‘அந்தியூர், சென்னம்பட்டி, பர்கூர் ஆகிய வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி 15-ந்தேதி (நேற்று) தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை என 3 நாட்கள் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்வநாதன் மற்றும் கூடுதல் வன அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னம்பட்டி, முரளி பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பல்வேறு ஊன் உண்ணிகள் தாவர உண்ணிகள் என 2 வகையாக பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பேது தனது குட்டியுடன் சிறுத்தைபுலி அங்குள்ள ஒரு வனக்குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றதை நேரில் பார்த்து பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பதிவான புலியின் கால் தடங்களை சேகரித்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வரைபடங்கள் மற்றும் குறிப்புகள் பதிவு செய்தல் பற்றிய கையேடுகள் வைத்து புலி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டோம். மொத்தம் 4 அளவுகளில் பதிவாகி இருந்த புலியின் கால்தடங்களை சேகரித் தோம். முதல் நாள் 4 புலிகளின் கால்தடங்கள் பதிவு செய்தோம். மேலும் வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலமும் வன விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். புலிகள் இருப்பிடம் பற்றிய தகவல் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் கண்காணிக்கப்படும்’ என்று வனத்துறையினர் தெரிவித்தார்கள்.

    இந்த கணக்கெடுக்கும் பணியில் அந்தியூர் வனச்சரகர் பாலகிருஷ்ணன். பர்கூர் வனச்சரகர் மணிகண்டன், சென்னம்பட்டி வனச்சரகர் செங்கோட்டையன் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் 100 பேர் ஈடுபட்டனர். 
    ×