முடிவுக்கு வந்த சென்சார் பிரச்சனை... ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ்?

ஜனநாயகன் பொங்கலை ஒட்டி, ஜன.9ஆம் அன்று வெளியாகிறதுடிசம்பர் 19 அன்று ஜனநாயகன் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
முடிவுக்கு வந்த சென்சார் பிரச்சனை... ஜனநாயகன் படத்திற்கு U/A சான்றிதழ்?
Published on

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இப்படம் பொங்கலை ஒட்டி, ஜன.9ஆம் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் நேற்றுவரை தணிக்கைக் குழு, படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை.

கடந்த டிசம்பர் 19 அன்று படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து தணிக்கைக் குழுவினர் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் வசனங்கள் நீக்கப்பட்டு மீண்டும் படம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், சான்றிதழ் வழங்கப்படவில்லை.

தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறியால், திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு UA சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மணிநேரம் 3நிமிடங்கள் ஓடக்கூடிய ஜன நாயகன் திரைப்படத்தில் 10க்கும் மேற்பட்ட சண்டை காட்சிகள் உள்ளதாகவும் விஜயின் படங்களிலேயே அதிக வன்முறை காட்சிகள் நிறைந்த படமாக ஜன நாயகன் உள்ளது எனவும் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com