search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட இந்திய ஜனநாயக பேரவை  வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட இந்திய ஜனநாயக பேரவை வலியுறுத்தல்

    • மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • இந்த திரைப்படம் யாா் மனதையும் புண்படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை.

    திருப்பூர் :

    தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடக் கோரி இந்திய ஜனநாயக பேரவை அறக்கட்டளை சாா்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து அறக்கட்டளையின் மாநில இளைஞரணித் தலைவா் ஏ.அம்ஜித் அசோக், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியள்ளதாவது:- தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கேரளத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் யாா் மனதையும் புண்படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை.

    இந்த திரைப்படத்தின் மூலமாக அனைத்து பெண்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படும். ஆகவே தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×