search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடுவதை  மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
    X

    'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் திரையிடுவதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களிடம் த.மு.மு.க. வலியுறுத்தியது.
    • பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பனைக் குளம் த.மு.மு.க. சார்பில் துணை பொது செயலாளர் முகவை சலிமுல்லாகான், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் பாபு, மாவட்ட துணை செயலாளர் சுலை மான், நகர் தலைவர் முகமது அமீன், நகர் செயலாளர் முகமது தமீம், நகர் துணை செயலாளர் அக்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் ராமநாதபுரம் நகரில் உள்ள தியேட்டர்களின் உரிமையா ளர்களிடம் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியிடுவதை மறுபரி சீலனை செய்யக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் தமிழகத்தில் வெளியாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' , புர்கா, பர்கானா ஆகிய திரைப்படங் கள் தமிழகத்தில் ஒற்றுமை யாக வாழக்கூடிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களி டையே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.

    இல்லாத ஒன்றை உருவாக்கி இந்த திரைப் படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரி வினையை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. எனவே இந்த திரைப்படத்தை திரை யிடாமல் மதநல்லிணக்க ஒற்றுமைக்கு உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×