என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hotspot 2 Much"

    • டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
    • விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

    ஒரே படத்தில் வெவ்வேறு கதைகள் இடம் பெறக் கூடிய 'ஆந்தாலஜி' வகைப் படங்களில் ஒன்று ஹாட்ஸ்பாட். கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது.

    'ஹாட்ஸ்பாட் 2' மச் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். டிரெய்லரின் படி இரண்டாம் பாகமும், முதல் பாகத்தை போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தில் நடிகர்கள் பிரியா பவானி சங்கர், தம்பி ராமையா, ரக்ஷன், அஸ்வின் குமார், ஆதித்ய பாஸ்கர், எம்.எஸ்.பாஸ்கர், பவானி ஸ்ரீ, பிரிஜிடா சாகா மற்றும் சஞ்சனா திவாரி ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். படத்தை நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.


    ×