என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய திரைப்பட விருது"

    • பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
    • எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறுகிறார்.

    இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் 'தேசிய விருதுகள்' வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார். 71-வது தேசிய திரைப்பட விருதுகள் பெறுபவர்கள் குறித்து ஆகஸ்ட் 1-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

    தேசிய திரைப்பட விருது விழாவில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மேலும், சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகளை 'பார்க்கிங்' படம் பெறுகிறது. அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறுகிறார். 'வாத்தி' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெறுகிறார்.

    மேலும், நடிகை ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது, சுதீப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனராக விருது என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    சிறந்த படமாக 12-வது ஃபெயில், சிறந்த இந்தி படமாக காதல் - எ ஜாக்ஃப்ரூட் மிஸ்டரியும் தேர்வாகி உள்ளது. ஷாருக்கான் (ஜவான்) மற்றும் விக்ராந்த் மாஸ்ஸி (12வது ஃபெயில்) சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். சிறந்த நடிகைக்கான விருதை ராணி முகர்ஜி பெறுகிறார். 

    • சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.
    • வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெறும் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தேசிய திரைப்பட விருதுகளை வென்ற திரைக்கஞைர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மொழிப் படங்களில் இருந்து,

    சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் படக்குழுவினருக்கும்,

    சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பெறும் பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும்,

    பார்க்கிங் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெறும் அன்புச் சகோதரர் M. S. பாஸ்கர் அவர்களுக்கும்,

    வாத்தி திரைப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெறும் ஜி.வி.பிரகாஷ் அவர்களுக்கும்,

    லிட்டில் விங்க்ஸ் ஆவணப் படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருது பெறும் சரவணமருது சௌந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும்,

    மேலும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளைச் சார்ந்த படக்குழுவினருக்கும், திரைக் கலைஞர்களுக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தங்களின் தொடர் கலைப் படைப்புகள் வாயிலாக, மக்களை மென்மேலும் மகிழ்வூட்டவும், விழிப்பூட்டவும் செய்திட வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    2024ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், அனிமல் திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருதுகள் வென்றுள்ளது. 

    • கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் கடந்த 2024 ஆண்டு வெளியானது உள்ளொழுக்கு.
    • ஊர்வசி மற்றும் பார்வதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.

    கிறிஸ்டோ டோமி இயக்கத்தில் கடந்த 2024 ஆண்டு வெளியானது உள்ளொழுக்கு. இப்படத்தில் ஊர்வசி மற்றும் பார்வதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இப்படம் மாமியார் மற்றும் மருமகளிடயே உள்ள உறவை சொல்லும் திரைப்படமாக உருவானது. படத்தின் இசையை சுஷின் ஷ்யாம் மேற்கொண்டார்.

    இந்நிலையில் 71-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியலை இன்று மாலை வெளியிட்டுள்ளனர். சிறந்த மலையாள திரைப்படமாக உள்ளொழுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாதாசாகேப் பால்கே விருதுக்கான பரிசுத்தொகை 10 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு.
    • சிறந்த அனிமேசன் சினிமா மற்றும் ஸ்பெசல் எபெக்ட்ஸ் ஆகிய விருதுகள் ஒன்றாக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2021-ம் ஆண்டுக்கான தேசிய விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக விருது வழங்குவது தள்ளிப்போனது.

    இந்த ஆண்டு 2022-ம் ஆண்டு சினிமா துறைகளுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. தேசிய விருதுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது இந்திரா காந்தி பெயரிலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படத்திற்கான விருது நர்கிஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த இரண்டு விருதுகளும் அவர்களது பெயரில் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது "இயக்குனருக்கான சிறந்த அறிமுக படம்" என்ற பெயரில் வழங்கப்படும். தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படத்திற்கான நர்கிஸ் தத் விருது தேசிய சமூக மற்றும் சுற்றுசூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது என்ற பெயரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது பெரும் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் பரிசுத்தொகையை பங்கிட்டு கொள்வார்கள். இனிமேல் இயக்குனருக்கு மட்டுமே இந்த பணம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூகப் பிரச்சனைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம் என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. தற்போது அது ஒரே விருதாக வழங்கப்பட இருக்கிறது.

    இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதை பெறும் நபருக்கு முன்னதாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அது 15 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த அனிமேசன் சினிமா மற்றும் ஸ்பெசல் எபெக்ட்ஸ் ஆகிய விருதுகள் ஒன்றாக்கப்பட்டு சிறந்த ஏவிஜி (animation, visual effects, gaming and comics) சினிமா பெயரில் வழங்கப்பட இருக்கிறது.

    ×