என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தேசிய திரைப்பட விருதுகளில் இருந்து இந்திரா காந்தி, நர்கிஸ் தத் பெயர் நீக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தேசிய திரைப்பட விருதுகளில் இருந்து இந்திரா காந்தி, நர்கிஸ் தத் பெயர் நீக்கம்

    • தாதாசாகேப் பால்கே விருதுக்கான பரிசுத்தொகை 10 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு.
    • சிறந்த அனிமேசன் சினிமா மற்றும் ஸ்பெசல் எபெக்ட்ஸ் ஆகிய விருதுகள் ஒன்றாக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2021-ம் ஆண்டுக்கான தேசிய விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக விருது வழங்குவது தள்ளிப்போனது.

    இந்த ஆண்டு 2022-ம் ஆண்டு சினிமா துறைகளுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. தேசிய விருதுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது இந்திரா காந்தி பெயரிலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படத்திற்கான விருது நர்கிஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த இரண்டு விருதுகளும் அவர்களது பெயரில் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது "இயக்குனருக்கான சிறந்த அறிமுக படம்" என்ற பெயரில் வழங்கப்படும். தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படத்திற்கான நர்கிஸ் தத் விருது தேசிய சமூக மற்றும் சுற்றுசூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது என்ற பெயரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது பெரும் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் பரிசுத்தொகையை பங்கிட்டு கொள்வார்கள். இனிமேல் இயக்குனருக்கு மட்டுமே இந்த பணம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூகப் பிரச்சனைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம் என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. தற்போது அது ஒரே விருதாக வழங்கப்பட இருக்கிறது.

    இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதை பெறும் நபருக்கு முன்னதாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அது 15 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த அனிமேசன் சினிமா மற்றும் ஸ்பெசல் எபெக்ட்ஸ் ஆகிய விருதுகள் ஒன்றாக்கப்பட்டு சிறந்த ஏவிஜி (animation, visual effects, gaming and comics) சினிமா பெயரில் வழங்கப்பட இருக்கிறது.

    Next Story
    ×